

துலாம் ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 6-ல் கேதுவும் 11-ல் சுக்கிரனும் உலவுவதால் மனத்தில் துணிவு பிறக்கும். பண வரவு கூடும். எடுத்த காரியங்களை எப்பாடுபட்டாவது நிறைவேற்றி வருவீர்கள். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைத்துவரும். குடும்ப நலம் சீராகும். வீண் செலவுகளும் இழப்புக்களும் உண்டாகும். சிக்கன நடவடிக்கை தேவை. கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வதும் அவசியமாகும். அரசாங்கப்பணியாளர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் பொறுப்புடன் காரியமாற்றுவது நல்லது.
தந்தை நலனில் அக்கறை தேவைப்படும். கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். பதவியில் சறுக்கல் ஏற்படும். எச்சரிக்கை தேவை. வாரப் பின்பகுதியில் முக்கியமான ஓரிரு எண்ணங்கள் ஈடேறும். பண வரவு சற்று அதிகரிக்கும். 26-ம் தேதி முதல் சுக்கிரன் 12-ம் இடத்திற்கு மாறுவதால் இடமாற்றமும், நிலைமாற்றமும் ஏற்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 26, 29.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, வான் நீலம்.
எண்கள்: 6, 7.
பரிகாரம்: சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. துர்க்கைக்குரிய மந்திரங்களைப் பாராயணம் செய்யலாம். பார்வையாற்றவர்களுக்கு உதவுவது நல்லது.
விருச்சிக ராசி வாசகர்களே!
உங்கள் ராசிநாதன் செவ்வாய் ராசியிலேயே குரு பார்வையுடன் உலவுவதாலும், சூரியன், புதன், குரு, ராகு ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இருப்பதாலும் பொருளாதார நிலை உயரும். பெரியவர்கள், தனவந்தர்கள், மேலதிகாரிகள் ஆகியோரது ஆதரவைப் பெறுவீர்கள். அரசு உதவி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு கூடும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். மக்களால் பாக்கியம் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புகள் ஆக்கம் தரும்.
இயந்திரப்பணி தொடர்பானவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். சனி 12-லும் கேது 5-லும் இருப்பதால் மனத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்பட்டு விலகும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். தொழிலாளர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். சுரங்கப் பணியாளர்கள் விழிப்புடன் செயல்படவும். 26-ம் தேதி முதல் சுக்கிரன் 11-ம் இடத்திற்கு மாறுவதால் வாழ்க்கைத்துணைவரால் அனுகூலம் உண்டாகும். கூட்டுத் தொழில் லாபம் தரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 25 (பிற்பகல்), 29.
திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு..
நிறங்கள்: பொன் நிறம், வெண்சாம்பல் நிறம், பச்சை, இளநீலம், ஆரஞ்சு.. .
எண்கள்: 1, 3, 4, 5, 6, 9.
பரிகாரம்: ஆஞ்சநேயருக்கும் விநாயகருக்கும் அர்ச்சனை, ஆராதனைகள் செய்து வழிபடவும். கால் ஊனமுள்ளவர்களுக்கு உதவுவது நல்லது.
தனுசு ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 9-ல் சுக்கிரனும் 10-ல் சூரியன், புதன், ராகு ஆகியோரும் 11-ல் சனியும் சஞ்சரிப்பதால் செய்து வரும் தொழில் விருத்தி அடையும். பதவி உயர்வும் இடமாற்றமும் கிடைக்கும். அரசு விவகாரங்களில் நல்ல திருப்பம் உண்டாகும். நண்பர்களும் உறவினர்களும் நலம் புரிவார்கள். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்கள் லாபம் தரும். கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும். வெளிநாட்டு வர்த்தகம் லாபம் தரும்.
தொழிலாளர்களது நிலை உயரும். நிறுவன, நிர்வாகத்துறையினருக்கு அனுகூலமான போக்கு தென்படும். சமுதாய நலப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு நற்பெயர் கிட்டும். பொருள் வரவு கூடும். தான, தர்மப்பணிகளில் பங்கேற்பீர்கள். 4-ல் கேதுவும், 8-ல் குருவும், 12-ல் செவ்வாயும் உலவுவதால் வாரப்பின்பகுதியில் உடல்நலனில் கவனம் தேவைப்படும். தாய் நலனிலும் மக்கள் நலனிலும் கூட அக்கறை செலுத்த வேண்டிவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 25 (பிற்பகல்), 26.
திசைகள்: தென்மேற்கு, மேற்கு, வடக்கு, தென்கிழக்கு, கிழக்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, நீலம், பச்சை, இளநீலம், வெண்மை.
எண்கள்: 1, 4, 5, 6, 8.
பரிகாரம்: விநாயகரையும், தட்சிணாமூர்த்தியையும் முருகனையும் தொடர்ந்து வழிபடவும். வேதம் படிப்பவர்களுக்கும் படித்தவர்களுக்கும் உதவி செய்யவும்.
மகர ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும் 7-ல் குருவும், 8-ல் சுக்கிரனும் 9-ல் புதனும் 10-ல் சனியும் 11-ல் செவ்வாயும் உலவுவதால் தொலைதூரத் தொடர்பு ஓரளவு பயன்படும். தெய்வப் பணிகளிலும் தர்மப்பணிகளிலும் ஈடுபாடு கூடும். உழைப்பு வீண்போகாது. மனத்தில் துணிவு கூடும். செயலில் வேகம் அதிகரிக்கும். எதிர்ப்புக்கள் விலகும். பொருள் வரவு திருப்திகரமாக இருந்துவரும். நல்லவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
சுப காரியங்கள் நிகழும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்களின் சேர்க்கையும் ஆதாயமும் உண்டு. இயந்திரப்பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். வழக்குகளில் வெற்றி கிட்டும். 9-ல் சூரியனும் ராகுவும் உலவுவதால் தந்தை நலனில் கவனம் தேவை. புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். மக்களால் ஓரிரு எண்ணங்கள் நிறைவேறும்.
அதிர்ஷ்டமான தேதிகள்:,செப்டம்பர் 25 (பிற்பகல்), 26, 29.
திசைகள்: வடகிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, வடமேற்கு.
நிறங்கள்: நீலம், வெண்மை, பொன் நிறம்..மெரூன், பச்சை.
எண்கள்: 3, 5, 6, 7, 8, 9..
பரிகாரம்: சூரியன், ராகு ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்வது நல்லது.
கும்ப ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 8-ல் புதனும் 10-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். வார ஆரம்பத்தில் சந்திரன் 8-ல் சூரியன், ராகு ஆகியோருடன் கூடியிருப்பது சிறப்பாகாது. மனத்தில் ஏதேனும் சலனம் ஏற்படும். பெற்றோர் நலனில் கவனம் தேவை. கண் மற்றும் மறைமுக உறுப்புக்கள் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். அரசு விவகாரங்களில் விழிப்பு தேவை. தந்தை நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். அதன்பிறகு நல்ல திருப்பம் உண்டாகும். தொலைதூரத் தொடர்பு ஓரளவு பயன்படும்.
பொறியியல், சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். 2-ல் கேது இருப்பதால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பொருளாதாரம் சம்பந்தப்பட்ட வகையில் விழிப்புத் தேவை. பக்குவமாகச் சமாளிக்கவும். வாழ்க்கைத்துணைவரிடம் சுமுகமாகப் பழகுவது அவசியம். கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் சோதனைகள் சூழும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 26 (பிற்பகல்), 29.
திசைகள்: வடக்கு, தெற்கு.
நிறங்கள்: பச்சை, சிவப்பு.
எண்கள்: 5, 9.
பரிகாரம்: கோளறு திருப்பதிகம் வாசிக்கவும் கேட்கவும் செய்யலாம். பெரியவர்கள், ஞானிகள், சித்தர்கள், வேத விற்பன்னர்களின் ஆசிர்வாதம் தேவை.
மீன ராசி வாசகர்களே!
உங்கள் ராசிநாதன் குரு 5-ம் இடத்தில் இருப்பதால், தன் உச்ச ராசியில் உலவுவது சிறப்பாகும். செவ்வாய் 9-ல் அமர்ந்து குருவின் பார்வையைப் பெறுவதும் விசேடமாகும். நல்லவர்களின் நட்புறவால் நலம் பல உண்டாகும். தெய்வ தரிசனமும், சாது தரிசனமும் கிடைக்கும். பொருள்வரவு திருப்தி தரும். ஸ்பெகுலேஷன் துறைகளால் ஆதாயம் கிடைக்கும். மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். கெட்டவர்களின் தொடர்பு கூடாது.
உழைப்புக்குப் பின்வாங்காமல் கடுமையாகப் பாடுபடுவதன் மூலம் அதிகம் பயன்பெறலாம். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணை நலனில் கவனம் தேவை. பிறரிடம் சுமுகமாகப் பழகுவது அவசியமாகும். வார முன்பகுதியை விடப் பின்பகுதி சிறப்பாக அமையும். முக்கியமான காரியங்கள் நிறைவேறும். நல்ல தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள்.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 25 (பிற்பகல்), 29.
திசைகள்: வடகிழக்கு, தெற்கு.
நிறங்கள்: பொன் நிறம், சிவப்பு.
எண்கள்: 3, 9.
பரிகாரம்: சூரியன், சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது. பிறரிடம் அணுகும் முறையைச் சிறப்பாக அமைத்துக் கொண்டால் பிரச்னைகளைக் குறைத்துக் கொள்ளலாம். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்யவும். சுமங்கலிகளுக்கு மங்களப் பொருட்களைத் தானமாகத் தருவது நல்லது.