பிரளயம் காத்த விநாயகர்

பிரளயம் காத்த விநாயகர்
Updated on
1 min read

ஆண்டுக்கு ஒருமுறை விநாயகர் சதுர்த்தி அன்று இரவு மட்டுமே தேனால் அபிஷேகம் நடைபெறும் தலம்தான் திருப்புறம்பியம் பிரளயம் காத்த விநாயகர் கோயில். சோழவளநாட்டில் நால்வரால் பாடல் பெற்றதும், மதுரை ஆதீனத்திற்குச் சொந்தமானதுமான திருப்புறம்பியத்தில், கரும்படு சொல்லியம்மை உடனாய சாட்சிநாதசுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் பிரளயம் காத்த விநாயகர் அருள்பாலித்து வருகிறார். தேனாபிஷேகத் தலம் எனவும் இது அழைக்கப்படுகிறது.

கடல் பொருட்களாலான மேனி

ராகு அந்தர கர்ப்பத்தில் ஏற்பட்ட பிரளயத்தில் திருப்புறம்பியம் திருத்தலத்தைக் கருணையால் அழியாவண்ணம் காத்தவர் பிரளயம் காத்த விநாயகர். நத்தைகூடு, கிளிஞ்சல், கடல்நுரை ஆகிய கடல் பொருட்களாலான மேனியைக் கொண்டவராகப் பிரளயம் காத்த விநாயகர் எழுந்தருளியுள்ளார். வருண பகவனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த விநாயகருக்கு வியாகர் சதுர்த்தி அன்று மட்டும் அபிஷேம் நடைபெறும். மற்ற நாட்களில் அபிஷேகம் கிடையாது. விநாயகர் சதுர்த்தி திருநாளில் மாலை 6.30 மணிக்குத் தொடங்கும் தேன் அபிஷேகம் விடிய விடிய நடைபெறும். அபிஷேகம் செய்யப்படும் தேனானது, விநாயகர் திருமேனியில் உறிஞ்சப்படுவதும், அபிஷேக வேளையில் விநாயகர் செம்பவள மேனியராய் காட்சி தருவதும் இன்றும் நிகழ்ந்துவருகிறது. தேன் ஒரு சொட்டுக் கூடத் திருமேனியை விட்டுக் கீழே வராது என்றும் கூறப்படுகிறது.

கும்பகோணத்திலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இத்தலத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று மாலை முதல் இரவுவரை விடியவிடிய சிறப்புப் பேருந்துகளை அரசு போக்குவரத்துக் கழகம் இயக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in