ஜோதிடம் என்பது அறிவியலா?- 12: இயற்பியலில் ஜோதிடம்

ஜோதிடம் என்பது அறிவியலா?- 12: இயற்பியலில் ஜோதிடம்
Updated on
1 min read

பூமி சூரியனை சுற்றி வரும் வட்டப்பாதையும், நிலவு பூமியை சூற்றி வரும் வட்டப்பாதையும் ஒன்றை ஒன்று இரு இடங்களில் வெட்டி கொள்ளும், அதில் உள் வெட்டு பகுதி 'ராகு' எனவும். வெளி வெட்டு பகுதி 'கேது' எனவும் அறியப்படுகிறது. ஜோதிடத்தில் ராகு என்பது பாம்பின் தலையாகவும், கேது என்பது பாம்பின் வாலாகவும் உருவாக படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் ராகு மற்றும் கேது என்பவை முறையே வடதுருவம், தென் துருவம் எனவும் கூறப்படுகிறது. எனவே இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரெதிர் பண்புகள் கொண்டவை என்பது புலனாகிறது.

ஜோதிடத்தில் கேதுவின் காரகத்துவம் சுருக்குபவர், கடை தருபவர் எனவும், ராகுவின் காரகத்துவம் பெருக்குபவர் அல்லது விரிவு படுத்துபவர் எனவும் கூறப்பட்டு இருக்கிறது. இதுவே இயற்பியலில் லென்ஸ் எனும் அடிகளின் மூலம் கொண்டு விளக்கலாம்

குவி ஆடி (கேது) - CONVEX LENS

ஒளியை ஓரிடத்தில் குவித்து நமது கவனத்திற்கு வழிவகை செய்யும் ஒரு சாதனம் குவி ஆடி எனும் குவி லென்ஸ். இதுவும் ஒரு கேதுவின் காரகத்துவமே ஆகும். சந்திரன் எனும் மனதினை ஓரிடத்தில் குவித்து தியானம் செய்ய உதவி செய்வது, ஆன்மீக சாதனைகளை செய்ய உதவுவது சந்திரன் + கேது.

குழி ஆடி (ராகு) - CONCAVE LENS

ஒளியை ஓரிடத்தில் குவிக்காது அதனை பெருக்கி பெரிதாக காட்டும் குழி ஆடி அல்லது குழி லென்ஸ் ஒரு ராகுவின் காரகத்துவமே ஆகும். இது உருப்பெருக்கியாகவும் உபயோகப்படுகிறது. சந்திரன் எனும் மனதினை ஓரிடத்தில் குவிக்காது, எதையும் பெரிதுபடுத்தி மனதை அலைபாயவைத்து மோகம், துரோகம், வஞ்சம், ஏமாற்றுதல் என்று பல தீய செயல்களில் மனிதனை புகுத்துவது சந்திரன் + ராகு.

கேது ஒளி குவிப்பு திறன் தந்தாலும் அது ஒரு அசுப கிரகம் என்பதால், கிட்ட பார்வை தன்மையை தந்துவிடுகிறது.

அது போல ராகு தூர பார்வை தன்மையை தந்துவிடுகிறது.

சந்திரன் அல்லது சூரியனுடன் ராகு சேர்ந்தால் தூர பார்வை நோயும் கேது சேர்ந்தால் கிட்ட பார்வை நோயும் ஏற்படுகிறது.

(மேலும் அறிவோம்)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in