

புத்தாண்டில் உறுதிமொழிகள் எடுக்கும் வழக்கம் 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பாபி லோனியர்களின் பழக்கத்தில் இருந்துள்ளது. புத்தாண்டு என்பது புதிய தொடக்கம் என்ற உணர்வு எல்லாரிடமும் காணப்படுகிறது. புகைபிடிப்பதை நிறுத்துவது, குடியை நிறுத்துவது, பணத்தைச் சிக்கனமாக செல வழிப்பது, குடும்பத்துடன் அதிக நேரம் கழிப்பது போன்ற பொதுவான உறுதிமொழிகள் தான் உலகம் முழுக்க நடைமுறையில் இருக்கிறது. ஆனால் பெரும்பாலான உறுதிமொழிகள் சீக்கிரத்திலேயே காற்றில் விடப்படுபவை. புத்தாண்டு உறுதிமொழிகளில் பெரும்பான்மையானவை வெறுமனே லௌகீக விஷயங்களாகவே இருக்கின்றன.
நிறைய கிறிஸ்துவர்கள் புத்தாண்டு உறுதிமொழியாக அதிக நேரம் பிரார்த்திப்பது, தினசரி பைபிள் படிப்பது, தேவாலயம் செல்வது போன்றவற்றையும் வைப்பார்கள். இவையெல்லாம் அழகிய உறுதிமொழிகள்தான். இவையும் பெரும்பாலும் காற்றிலேயே விடப்படும்.
புத்தாண்டு உறுதிமொழிகளில் பெரும் பாலானவை பின்பற்றப்படாமல் போவதற்குக் காரணம் அதற்குச் சரியான உந்துதல் இல்லாமல் போவதுதான்.
உதாரணத்துக்கு நீங்கள் ஏன் தினசரி வேதாகமத்தைப் படிக்க வேண்டும்? உங்கள் உடல் எடையை ஏன் நீங்கள் குறைக்க விரும்புகிறீர்கள்? ஏன் சிகரெட்டைக் கைவிட வேண்டும்? நீங்கள் உங்கள் உடலை, உங்களை பாழ்படுத்தாமல் இருப்பதன் மூலம் கடவுளுக்கு மரியாதை செய்ய விரும்புகிறீர்களா?
கடவுளுடன் மனிதர் இருக்கும்போது, அவர்கள் நிறைந்த பலன்களைப் பெறமுடியும். கடவுளின் துணை இல்லாவிட்டால் மனிதர் களால் இயல்வது ஏதுமில்லை. அதனால் உங்களது புத்தாண்டு உறுதிமொழியின் மைய மாக கடவுள் மீதான தீவிரமான நம்பிக்கையை வையுங்கள். வெற்றி பெறுவீர்கள்.
அதனால் உங்கள் உறுதிமொழிகள் பலிக்குமளவுக்கு ஞானத்தைக் கடவுளிடம் வேண்டுங்கள். உங்கள் உறுதிமொழியை நிறை வேற்றுவதற்கான வலுவைத் தரச்சொல்லித் தொழுங்கள். உங்களுக்கு உதவக்கூடிய கடவுளின் பலத்தை முதலில் நம்புங்கள். உங்கள் உறுதிமொழியை நிறைவேற்ற இயலாமல் போக நேரும் தற்காலிகத் தோல்வி களைக் கண்டு அஞ்சாதீர்கள்.
கடவுள் உங்களுக்கானதை நிறைவேற்று வார். நம்புங்கள். அவர் உங்களது நேர்மையைக் காலைக் கதிரவனைப் போல ஒளிரவைப்பார்.