

மேஷ ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் புதனும், 4-ல் சுக்கிரனும் 6-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். வார முன்பகுதியில் சந்திரனும் சாதகமாக உலவுவதால் தொலைதூரத் தொடர்பு பயன்படும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துகளின் சேர்க்கையோ அவற்றால் ஆதாயமோ கிடைத்துவரும். மாணவர்களது நிலை உயரும். மக்களால் சுபச் செலவுகள் ஏற்படும்.
தர்ம குணம் வெளிப்படும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் புகழ் பெறுவார்கள். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். மாதர்களது எண்ணம் ஈடேறும் திரவப் பொருட்கள் லாபம் தரும். குடும்பத்தில் சிறுசிறு சச்சரவுகள் ஏற்பட்டு விலகும். வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 4, 7, 8.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: புகை நிறம், இளநீலம், வெண்மை, பச்சை.
எண்கள்: 4, 5, 6.
பரிகாரம்: சனிக்கு நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபடுவது நல்லது. மாற்றுத் திறனாளிகளுக்கு உதவவும்.
ரிஷப ராசி வாசகர்களே,
உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 3-லும் கேது 11-லும் உலவுவது சிறப்பாகும். வார ஆரம்பத்தில் சந்திரன் 8-ல் உலவுவதால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். பெண்களால் அவமானப்பட நேரலாம். 6-ம் தேதி முதல் நல்ல திருப்பம் உண்டாகும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். தெய்வப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். அதனால் மனத்தில் தெளிவு பிறக்கும். சகோதரிகளால் அனுகூலம் உண்டாகும்.
வாரப் பின்பகுதியில் செய்து வரும் தொழிலில் ஓரளவு வளர்ச்சி காணலாம். ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும். ஜன்ம ராசியில் சூரியன், செவ்வாய், புதன் ஆகியோர் உலவுவதால் எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது. 3-ல் குருவும் 5-ல் ராகுவும் இருப்பதால் மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் விழிப்புத் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 7, 9.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம்.
எண்கள்: 6, 7.
பரிகாரம்: பராசக்தியை வழிபடவும்.
மிதுன ராசி வாசகர்களே,
உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் சுக்கிரனும், 6-ல் சனியும், 10-ல் கேதுவும் உலவுவதால் வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புகள் கூடிவரும். தொழில் கூட்டாளிகள் உதவுவார்கள். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்கும் மாதர்களுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். மக்களால் அனுகூலம் உண்டாகும்.
மகப்பேறு பாக்கியம் சிலருக்கு இப்போது கிடைக்கும். 4-ல் ராகுவும் 12-ல் சூரியன், செவ்வாய், புதன் ஆகியோரும் இருப்பதால் உடல்நலனில் கவனம் செலுத்தி வருவது நல்லது. கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். அரசுப் பணியாளர்களும் நிர்வாகத் துறைகளைச் சேர்ந்தவர்களும் வியாபாரிகளும் இயந்திரப் பணியாளர்களும் பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 4, 8.
திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு, வடமேற்கு, மேற்கு.
நிறங்கள்: பொன் நிறம், நீலம், மெரூன்.
எண்கள்: 3, 6, 7, 8.
பரிகாரம்: திருமாலை வழிபடவும்.
கடக ராசி வாசகர்களே,
உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 11-ல் சூரியனும் செவ்வாயும் புதனும் 12-ல் சுக்கிரனும் உலவுவதால் துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். நல்லவர்கள் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார்கள். சுப காரியங்கள் நிகழும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். பயணத்தால் அனுகூலம் ஏற்படும்.
கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். அரசு உதவி கிடைக்கும். கலைஞர்களுக்கு வரவேற்பு அதிகமாகும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். வாரப் பின்பகுதியில் சிறு சங்கடம் ஏற்படும். மக்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும் உங்களுக்குத் தலை மற்றும் மறைமுக நோய் நொடி உபாதைகள் ஏற்படும். உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 4, 7.
திசைகள்: தெற்கு, கிழக்கு, தென்மேற்கு, வடக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: சிவப்பு, புகை நிறம், இளநீலம், பச்சை, ஆரஞ்ச
எண்கள்: 1, 4, 5, 6, 9.
பரிகாரம்: சனிக்கும் கேதுவுக்கும் பிரீதி, பரிகாரங்களைச் செய்யவும்.
சிம்ம ராசி வாசகர்களே,
உங்கள் ராசிக்கு 10-மிடத்தில் சூரியன், செவ்வாய், புதன் ஆகியோரும் 12-ல் சுக்கிரனும் உலவுவதால் செயலில் வேகம் கூடும். முக்கியஸ்தர்கள் உங்களுக்கு உதவுவார்கள். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத் துறையினருக்கு வரவேற்பு கூடும். பொறியியல், சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வெற்றி நடைபோடுவார்கள்.
தந்தையாலும், உடன்பிறந்தவர்களாலும் அனுகூலம் உண்டாகும். வியாபாரிகளுக்கு அளவோடு லாபம் கிடைத்துவரும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். நிலபுலங்கள் ஓரளவு லாபம் தரும். 2-ல் ராகுவும் 4-ல் சனியும் 8-ல் கேதுவும் உலவுவதால் குடும்பத்தில் சலசலப்புகள் இருந்துவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 4, 7, 8.
திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, தெற்கு, கிழக்கு.
நிறங்கள்: இளநீலம், சிவப்பு, பச்சை, ஆரஞ்சு.
எண்கள்: 1, 5, 6, 9.
பரிகாரம்: சனி, ராகு, கேது ஆகியோருக்குத் தொடர்ந்து பிரீதி, பரிகாரங்கள் செய்துவருவது நல்லது. ஏழை, எளியவர்களுக்கு அன்னதனம் செய்வது நல்லது.
கன்னி ராசி வாசகர்களே,
உங்கள் ராசிக்கு 3-ல் சனியும் 11-ல் குருவும் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். நல்லவர்கள் உங்களுக்குக் கைகொடுத்து உதவுவார்கள். நற்பணிகளில் ஈடுபாடு கூடும். மன உற்சாகம் பெருகும். நிலபுலங்களால் ஆதாயம் கிடைக்கும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு உண்டாகும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் பெறுவீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். கலைத் துறையினருக்கு வரவேற்பு கூடும்.
மாதர்களது எண்ணம் நிறைவேறும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். பொன்னும் பொருளும் சேரும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். ஜலப் பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். 9-ல் சூரியன், செவ்வாய், புதன் ஆகியோர் உலவுவதால் தந்தை நலனில் கவனம் தேவை. வீண் அலைச்சலையும் செலவுகளையும் தவிர்ப்பது நல்லது. புதியவர்களிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 4, 7, 8.
திசைகள்: மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெண்மை, நீலம், பொன் நிறம்..
எண்கள்: 3, 6, 8.
பரிகாரம்: துர்க்கையையும் விநாயகரையும் வழிபடவும்.