Published : 07 Mar 2014 20:57 pm

Updated : 07 Jun 2017 10:58 am

 

Published : 07 Mar 2014 08:57 PM
Last Updated : 07 Jun 2017 10:58 AM

வார ராசி பலன் | 06-03-14 முதல் 12-03-14 வரை - (துலாம் முதல் மீனம் வரை)

06-03-14-12-03-14

துலாம்

புதன், சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். வியாபாரம் பெருகும். எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும் முன்னேற்றம் காண்பார்கள். கலைத்துறை ஊக்கம் தரும். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் அலைச்சல் அதிகமாகும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.


கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்வது நல்லது. 10ஆம் தேதி முதல் புதன் 5ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. மக்களால் செலவுகள் ஏற்படும். 12ஆம் தேதி முதல் குரு வக்கிர நிவர்த்தி பெற்று நேர்கதியில் உலவத் தொடங்குவதால் புனிதமான காரியங்களில் ஈடுபாடு கூடும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிட்டும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். முயற்சி வீண்போகாது. பெரியவர்கள், தனவந்தர்களது ஆசிகளையும் ஆதரவையும் பெறுவீர்கள்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 11, 12

திசைகள்: தென்கிழக்கு, வடக்கு

நிறங்கள்: இளநீலம், வெண்மை, பச்சை

எண்கள்: 5, 6

பரிகாரம்: சர்ப்ப கிரகங்களை வழிபடவும். ஆஞ்சநேயரையும் முருகனையும் தொடர்ந்து வழிபடுவது அவசியமாகும். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்யவும்.

விருச்சிகம்

உங்கள் ராசிநாதன் செவ்வாய் 11ஆமிடத்திலும் சுக்கிரன் 3இலும், கேது 6-லும் உலவுவது சிறப்பாகும். குரு 8இல்இருந்தாலும் வக்கிரமாக இருப்பது நல்லது. சனி 12இல் இருந்தாலும் வக்கிரமாக இருப்பதால் நலம் புரிவார். எதிர்ப்புக்கள் விலகும். பொருளாதார நிலை திருப்தி தரும். எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு கூடும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும்.

கூட்டாளிகள் உதவுவார்கள். கலைஞர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும். போட்டிகளில் வெற்றி கிட்டும். நல்ல தகவல் வந்து சேரும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். 10ஆம் தேதி முதல் புதன் 4ஆமிடம் மாறுவதால் வியாபாரம் பெருகும். மாணவர்களது நிலை உயரும். 12ஆம் தேதி முதல் குரு வக்கிர நிவர்த்தி பெற்று, 8ஆமிடத்தில் நேர் கதியில் உலவத் தொடங்குவதால் பொருளாதாரப் பிரச்னைகள் ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 6, 8, 12

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, தெற்கு

நிறங்கள்: இளநீலம், வெண்மை, மெரூன், சிவப்பு

எண்கள்: 3, 6, 7, 9

பரிகாரம்: துர்கா தேவியின் கவசம், சப்தசதீ, காயத்ரி சொல்வது நல்லது. திருமாலின் திருக்கோயிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றவும்.

தனுசு

உங்கள் ராசிக்கு 2இல் புதனும் சுக்கிரனும் 3இல் சூரியனும், 10இல் செவ்வாயும், 11இல் சனி, ராகு ஆகியோரும் உலவுவது சிறப்பாகும். வெற்றி மேல் வெற்றி பெறுவீர்கள். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். சுப காரியங்கள் நிகழும். தொழிலில் விசேஷமான வளர்ச்சி உண்டாகும். புதிய துறைகளில் முதலீட்டு வாய்ப்பு கூடிவரும். கணவன் மனைவி யிடையே அந்நியோன்யம் இருந்துவரும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். பதவிகளும் பட்டங்களும் தேடிவரும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். 10ஆம் தேதி முதல் புதன் 3ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. 12ஆம் தேதி முதல் குரு வக்கிர நிவர்த்தி பெற்று, நேர் கதியில் 7ஆமிடத்தில் உலவுவது விசேஷம். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். எதிரிகளின் கரம் வலுக்குறையும். பயணத்தால் அதிக நலம் உண்டாகும். வழக்கில் வெற்றி கிட்டும். வாழ்வில் வெற்றி பெற நல்ல வாய்ப்புக்கள் உருவாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 8, 11

திசைகள்: வடமேற்கைத் தவிர இதர திசைகள்

நிறங்கள்: நீலம், சிவப்பு, பச்சை, ரோஸ்.

எண்கள்: 1, 4, 5, 6, 8, 9

பரிகாரம்: கணபதி ஜப, ஹோமம் செய்வது நல்லது. வேத பாடசாலைகளுக்கும், வேதம் படித்த அந்தணர்களுக்கும் உதவி செய்யவும்.

மகரம்

உங்கள் ராசியில் சுக்கிரனும் 10இல் ராகுவும் 6இல் வக்கிர குருவும் உலவுவதால் தோற்றப் பொலிவு கூடும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் கிட்டும். கலைஞர்கள் வெற்றிப் படிகளில் ஏறுவார்கள். பெண்களுக்கு மன உற்சாகம் கூடும். பயணத்தால் அனுகூலம். பண வரவு சற்று கூடும். 2இல் சூரியனும் 4இல் கேதுவும், 9-ல் வக்கிர செவ்வாயும் இருப்பதால் குடும்ப நலனில் அக்கறை தேவை.

வீண்வம்பு, வழக்குகளில் ஈடுபடலாகாது. பெற்றோர் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். கண், இதயம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். 10ஆம் தேதி முதல் புதன் 2ஆமிடம் மாறுவதால் வியாபாரிகளுக்கு முன்னேற்றமான பாதை தெரியவரும். மாணவர்கள் நிலை உயரும். 12ஆம் தேதி முதல் குரு வக்கிர நிவர்த்தி பெறுவதால் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. சகோதரர்களால் பிரச்னைகள் சூழும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 8, 11, 12

திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு, வடக்கு

நிறங்கள்: நீலம், வெண்மை, கறுப்பு

எண்கள்: 3, 4, 6

பரிகாரம்: சூரிய வழிபாடு செய்யவும். விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடவும். குடும்பப் பெரியவர்களது ஆசிகளைப் பெறவும்.

கும்பம்

3இல் கேதுவும், 5இல் குருவும், 12இல் சுக்கிரனும் உலவுவது சிறப்பு. எதிர்ப்புக்களைச் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். நல்லவர்கள் உற்ற துணையாக இருப்பார்கள். தெய்வப் பணிகளில் ஈடுபாடு கூடும். பண நடமாட்டம் அதிகரிக்கும். வசதிகள் பெருகும். அறநிலையப் பணியாளர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை. ஜன்ம ராசியில் சூரியன் இருப்பதால் அலைச்சல் அதிகமாகும். 8இல் வக்கிர செவ்வாய் இருப்பதால் எக்காரியத்திலும் பதற்றப்படாமல் ஈடுபடுவது நல்லது.

9இல் சனி வக்கிரமாக ராகுவுடன் இணைந்திருப்பதால் தந்தை நலனில் கவனம் தேவைப்படும். புதன் 12இல் இருப்பதால் வியாபாரிகளுக்கு லாபம் குறைவதுடன், நஷ்டமும் ஆகும். 10ஆம் தேதி முதல் புதன் ஜன்ம ராசிக்கு மாறுவதும் சிறப்பாகாது. 12ஆம் தேதி முதல் குரு வக்கிர நிவர்த்தி பெறுவதால் மக்கள் நலம் சீராகும். உற்சாகம் கூடும். சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 6, 8, 11, 12

திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு

நிறங்கள்: மெரூன், பொன் நிறம், நீலம்

எண்கள்: 3, 6, 7

பரிகாரம்: திருமாலையும், முருகனையும் வழிபடவும். இளைஞர்கள் முன்னேற உதவி செய்யவும்.

மீனம்

உங்கள் ராசிக்கு 11இல் புதனும் சுக்கிரனும் உலவுவது சிறப்பு. நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரது தொடர்பு நலம் தரும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். கணவரால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். மாதர்கள் எண்ணம் ஈடேறும். மாணவர்கள் நிலை உயரும். கூட்டுத் தொழில் லாபம் தரும். சூரியன், செவ்வாய், குரு, சனி, ராகு, கேது ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் குடும்பத்தில் குழப்பம் சூழும்.

கோபத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. அரசாங்கத்தாரால் சங்கடம் உண்டாகும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். பயணத்தின்போது பாதுகாப்பு தேவை. கொடுக்கல் வாங்கலில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். அக்கம்பக்கத்தாரால் பிரச்னைகள் சூழும். எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடுவது அவசியம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 6, 8, 11, 12

திசைகள்: வடக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: பச்சை, ரோஸ், இளநீலம், வெண்மை.

எண்கள்: 5, 6

பரிகாரம்: கோளறு திருப்பதிகம் வாசிக்கவும். நவக்கிரக வழிபாடு நலம் தரும்.

அன்பு வாசகர்களே....


வரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசைவார ராசிபலன்சந்திர சேகர பாரதி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author