

ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது அவதார மஹோத்ஸவத்தை முன்னிட்டு ஜீயர் சுவாமிகளின் மங்களாஸாசனம் 09.02.17 வியாழக்கிழமையன்று காலை 9 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் மற்றும் ஸ்ரீ பாஷ்யகார சுவாமி தேவஸ்தானம் சார்பாக ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி ஜீயர் சுவாமிகளின் மங்களாசாசனம் நடைபெற்றது.
மேலும் இந்த வைபவத்தில் ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமத் பரமஹம்ச அப்பன் பரகால ராமானுஜ எம்பார் ஜீயர், ஸ்ரீமத் பரமஹம்ஸ யதிராஜ ஜீயர், திருமலை திருப்பதி ஸ்ரீமத் பரமஹம்ஸ பெரியகேள்வியப்பன் சடகோப ராமானுஜ பெரிய ஜீயர், சிறிய கேள்வியப்பன் கோவிந்த ராமானுஜ சின்ன ஜீயர், மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயர், திருநாராயணபுரம் ஸ்ரீயதுகிரி யதிராஜ நாராயண ஜீயர், ஸ்ரீகாஞ்சிபுரம் வாதிகேஸரி அழகிய மணவாள ஜீயர், திருக்கோவிலூர் எம்பெருமானார் ஜீயர் ஆகியோர் கலந்து கொண்டு ஸ்ரீராமானுஜர் குறித்து சிறப்புற உரையாற்றினார்கள். அன்றைய தினம் மாலை ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் நேரில் வந்திருந்து ஸ்ரீராமானுஜரின் சிறப்புகள் குறித்து பக்தர்களிடையே உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.