

மேஷ ராசி நேயர்களே
உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரனும் 6-ல் ராகுவும் உலவுவது சிறப்பு. நல்லதொரு தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். சுகானுபவம் உண்டாகும். பெண்களால் நல்லது ஏற்படும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். கலைத்துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவும். ஜலப்பொருட்கள் லாபம் தரும்.
புதிய வாகனம் வாங்க சிலருக்கு வாய்ப்பு உண்டாகும். வாரப் பின்பகுதியில் எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். 26-ம் தேதி முதல் புதன் 6-ம் இடம் மாறி, வலுப்பெறுவதால் வியாபாரிகளுக்கு லாபம் கூடும். கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். மாணவர்களது நிலை உயரும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். அவர்களால் ஓரிரு காரியங்கள் நிறைவேறும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 22, 27
திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெண்மை, இளநீலம், வெளிர்கறுப்பு
எண்கள்: 4, 6
பரிகாரம்: சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றவும். ஆதரவற்றவர்களுக்கு உதவவும்.
ரிஷப ராசி நேயர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும் 4-ல் புதனும் 6-ல் செவ்வாயும் சனியும் 11-ல் கேதுவும் உலவுவதால் குடும்ப நலம் சிறக்கும். பண வரவு அதிகரிக்கும். முயற்சி வீண்போகாது. நல்ல தகவல் வந்து சேரும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். வியாபாரம் பெருகும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். ஆன்மிக, அறநிலையப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். எதிரிகள் அடங்கிப் போவார்கள்.
வழக்கில் சாதகமான போக்கு தென்படும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேரும். 26-ம் தேதி முதல் புதன் 5-ம் இடம் மாறுவதால் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். நவீன விஞ்ஞானத் துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். நிறுவன, நிர்வாகத்துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 22, 27
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு
நிறங்கள்: ஆரஞ்சு, மெரூன், வெண்மை, பச்சை, நீலம், சிவப்பு
எண்கள்: 1, 5, 6. 7, 8, 9
பரிகாரம்: துர்கையையும் தட்சிணாமூர்த்தியையும் தொடர்ந்து வழிபடவும். வேத விற்பன்னர்கள், குடும்பப் பெரியவர்களை வணங்கி, அவர்களது நல்வாழ்த்துக்களைப் பெறவும்.
மிதுன ராசி நேயர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் சுக்கிரனும் 3-ல் சூரியனும் 10-ல் கேதுவும் உலவுவதால் குடும்பத்தில் குதூகலம் கூடும். பேச்சில் இனிமையும் திறமையும் வெளிப்படும். விருந்து, உபசாரங்களிலும் கேளிக்கை, உல்லாசங்களிலும் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களது நோக்கம் நிறைவேறும். கலைத்துறையினருக்கும் மாதர்களுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். அரசுப் பணியாளர்களது நிலை உயரும்.
தந்தையால் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி உறவு நிலை சீராக இருந்துவரும். கடல் வாணிபம் லாபம் தரும். ஜலப்பொருட்களால் ஆதாயம் கூடும். முகப்பொலிவு கூடும். 26-ம் தேதி முதல் புதன் 4-ம் இடம் மாறுவதால் அந்தஸ்தும் மதிப்பும் உயரும். உடல் நலம் சீராகும். கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகு போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். புதிய பதவி, பட்டங்கள் உங்களைத் தேடிவரும். அலைச்சல் வீண்போகாது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 22, 27.
திசைகள்: தென்கிழக்கு, கிழக்கு, வடமேற்கு, வடகிழக்கு.
நிறங்கள்: இளநீலம், ஆரஞ்சு, வெண்மை, மெரூன், பொன் நிறம், மஞ்சள்.
எண்கள்: 1, 3, 6, 7
பரிகாரம்: திருமாலை வழிபடவும். ஏழை மாணவர்கள் கல்வி கற்க உதவவும்.
கடக ராசி நேயர்களே
உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும் 2-ல் புதனும் 3-ல் ராகுவும் உலவுவதால் தோற்றப்பொலிவு கூடும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். குடும்ப நலம் சிறக்கும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். கலைத்துறையினருக்கு மதிப்பு உயரும். வரவேற்பு கூடும். வியாபாரத்தில் அபிவிருத்தி காண வழிபிறக்கும். புதியவர்களது தொடர்பு பயன்படும். அரசியல்வாதிகளுக்கும், அரசுப்பணியாளர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும்.
பயணத்தின் மூலம் ஒரு எண்ணம் நிறைவேறும். வெளிநாட்டுத் தொடர்பு வலுக்கும். 4-ல் செவ்வாயும் சனியும் இருப்பதால் எக்காரியத்திலும் நிதானமாக யோசித்து ஈடுபடுவது நல்லது. பெற்றோர் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். 26-ம் தேதி முதல் புதன் 3-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. வியாபாரிகள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. நண்பர்கள், உறவினர்களால் பிரச்சினைகள் எழும். பக்குவமாகச் சமாளிக்கவும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 22, 27
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, வடக்கு
நிறங்கள்: வெண்மை, சாம்பல் நிறம், பச்சை, இளநீலம்
எண்கள்: 4, 5, 6
பரிகாரம்: சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடவும். ஏழை, எளியவர்களுக்கு உதவவும்.
சிம்ம ராசி நேயர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாயும் சனியும் 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பு. முக்கியமான ஓரிரு எண்ணங்கள் இப்போது நிறைவேறும். பெரியவர்கள், உயர் அதிகாரிகள் உதவுவார்கள். சுப காரியச் செலவுகள் ஏற்படும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். பொறியியல், சட்டம், காவல், ராணுவம் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள் சாதனை பல ஆற்றுவார்கள். போட்டிப் பந்தயங்களில் வெற்றி கிட்டும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். செல்வாக்கும் மதிப்பும் உயரும்.
அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். உடல்நலம் சீராகும். உயர் பொறுப்புக்கள் உங்களைத் தேடிவரும். 26-ம் தேதி முதல் புதன் 2-ம் இடம் மாறுவதால் பேச்சாற்றல் கூடும். பொருளாதார நிலை உயரும். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் கைகூடும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு அதிகரிக்கும். நல்லவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 22, 27
திசைகள்: தென்கிழக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு
நிறங்கள்: ஆரஞ்சு, நீலம், சிவப்பு, வெண்மை
எண்கள்: 1, 6, 8, 9
பரிகாரம்: துர்கையையும், விநாயகரையும் தொடர்ந்து வழிபடவும். குருப் பிரீதி செய்வது நல்லது. வேத விற்பன்னர்களுக்கு உதவவும்.
கன்னி ராசி நேயர்களே
உங்கள் ராசிக்கு 11-ல் குருவும் சுக்கிரனும் உலவுவதால் செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காணலாம். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைத்துவரும். புத்திசாலித்தனம் வெளிப்படும். கலைத் துறையினருக்கு வரவேற்பு அதிகரிக்கும். பெண்களின் நிலை உயரும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நடைபெறும். மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். மக்களால் அனுகூலம் உண்டாகும். பெரியவர்கள், தனவந்தர்கள் உதவி புரிவார்கள். பொன்னும் பொருளும் சேரும்.
உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். ஜலப்பொருள் லாபம் தரும். வாரப் பின்பகுதியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். கண் சம்பந்தமான உபாதைகள் உண்டாகும். பெற்றோர் நலனில் கவனம் செலுத்துவது நல்லது. 26-ம் தேதி முதல் ராசிநாதன் புதன் ஜன்ம ராசிக்கு இடம் மாறி வலுப்பெறுவதால் உடல்நலம் சீராகும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். தொழில் முன்னேற்றத்துக்குரிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபார நுணுக்கம் தெரியவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 22, 23
திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு
நிறங்கள்: வெண்மை, இளநீலம், பொன் நிறம்
எண்கள்: 3, 6
பரிகாரம்: சர்ப்ப சாந்தி செய்து கொள்ளவும். ஆதித்ய ஹ்ருதயம் படிக்கவும், கேட்கவும் செய்யலாம்.