Published : 17 Jan 2017 06:00 AM
Last Updated : 17 Jan 2017 06:00 AM

ஜோதிடம் என்பது அறிவியலா?- 6: கிரக வக்கிரம்

வக்கிரம் என்ற சொல் சம்ஸ்கிருத மொழியில் இருந்து வந்தது. இதன் பொருள் 'பின்னோக்கி நகர்த்தல்' என்றே அர்த்தம். தன் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வரும் கிரகம் எப்படி பின்னோக்கி செல்லும் என்ற கேள்விக்கான விடையை இந்த பதிவு கூறும்.

சூரிய ஈர்ப்பு விசையால், பூமி சுற்றுகிறது. பூமியின் ஈர்ப்பு விசையால், சந்திரன் சுற்றுகிறது. பூமி சுழற்சி வேகம், சுக்கிரன் புதனை விட குறைவு, என்னெனில் சுக்கிரன், புதன் சூரியனுக்கு அருகிலும், அவற்றின் சுற்று வட்டபதையின் ஆரம் குறைவாகவும், சூரிய ஈர்ப்பு விசை அதிகமாகவும் இருப்பதே காரணம். எனவே சுக்கிரன் மற்றும் புதன் வக்கிரம். பூமியின் சுற்று வட்ட பாதையில், வளைவுகளில் பூமி முன்னோக்கி குரு மற்றும் சனியை கடந்து செல்லும் போது, மெதுவாக நகரும், பெரிய சுற்று வட்ட பாதை ஆரமும் கொண்ட, சூரிய ஈர்ப்பு விசை குறைவாகவும் இருக்கும், குரு மற்றும் சனி கிரகங்கள், பூமியில் இருந்து பார்க்கும் போது பின்னோக்கி செல்வது போல் தெரியும் மாய தோற்றமே. வக்கிரம் என்ற நிகழ்வு தோன்ற காரணம். கிரகங்களின் சுழற்சி வேக வேறுபாடுகளை அறிந்தால் இதனை நன்கு அறியலாம்.

மாயத் தோற்றம்

இரு வேறு பட்ட மோட்டார் சைக்கிள்கள், ஒரு நீள்வட்ட பாதையில் செல்லும் போது, அதிக வேகம் கொண்ட மோட்டார் சைக்கிள் குறைவான வேகம் கொண்ட மோட்டார் சைக்கிளை, நீள் வட்ட பாதை வளைவில் தாண்டி செல்லும் போது, குறைவான வேகம் கொண்ட மோட்டார் சைக்கிள் பின்னோக்கி செல்லும் மாய தோற்றம் ஏற்படும். இதுவே பிரபஞ்ச கிரக வக்கிரத்தின் வக்கிரத்தின் உதாரணம்.

பெரும்பாலும் வக்கிரம் பெற்ற கிரகங்கள் பூமிக்கு அருகில் இருக்கும். இதன் காரணம் ஜாதக சக்கரத்தில் சூரியனுக்கு எதிர் திசையில் இந்த கிரகங்கள் வருவதே காரணம். ஏற்கனவே கூறியபடி சூரியனுக்கு 7 இடத்தில் பூமி இருக்கும் என்ற கோட்பாட்டின்படி, வக்கிரம் பெற்ற கிரகங்கள் பூமிக்கு அருகில் இருக்கும்.

கிரக வக்கிரமும், வக்கிர நிவர்த்தியும்

ஒரு கிரகம் இருக்கும் நட்சத்திரத்தில் இருந்து 10 நட்சத்திரத்தில் சூரியன் செல்லும் போது, அந்த கிரகம் வக்கிரம் பெறும். அது போல சூரியன் 21 நட்சத்திரத்தில் பயணிக்கும் போது அந்த கிரகம் வக்கிர நிவர்த்தி அடையும்.

குறிப்பு: சூரியனில் இருந்து முன்னோக்கி செல்ல செல்ல இருக்கும் கிரகங்களின் வக்கிர நாட்கள் அதிகரிக்கும்.

புதன் 24 நாட்கள் வக்கிரமாகவும்,

சுக்கிரன் 42 நாட்கள் வக்கிரமாகவும்,

செவ்வாய் 80 நாட்கள் வக்கிரமாகவும்,

குரு 120 நாட்கள் வக்கிரமாகவும்,

சனி 140 நாட்கள் வக்கிரமாகவும் இருப்பார்கள்.

(மேலும் அறிவோம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x