தியாகராஜ சுவாமிகளின் 179-வது ஆராதனை விழா தொடக்கம்

தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழாவை நேற்று குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்த உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார். படம்: ஆர்.வெங்கடேஷ்

தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழாவை நேற்று குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்த உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார். படம்: ஆர்.வெங்கடேஷ்

Updated on
1 min read

தஞ்சாவூா்: ​திரு​வை​யாறில் தியாக​ராஜ சுவாமிகளின் 179-வது ஆராதனை விழா நேற்று மாலை தொடங்​கியது. தியாகப் பிரம்மமகோத்சவ சபா செய​லா​ளர் அரித்​து​வாரமங்​கலம் ஏ.கே.பழனிவேல் வரவேற்​றார். தலை​வர் ஜி.கே.​வாசன் தலைமை வகித்​தார். சிறப்பு விருந்​தின​ராக ஆட்​சி​யர் பா.பிரி​யங்கா பங்​கஜம் கலந்​து கொண்​டார்.

விழா​வைத் தொடங்​கி​வைத்து சென்னை உயர் நீதி​மன்ற நீதிபதி ஆர்​.சுரேஷ் கு​மார் பேசி​ய​தாவது: தியாக​ராஜ சுவாமிகளின் ஆராதனை விழா 200-வது ஆண்டை நோக்​கிச் செல்​லும் அளவுக்கு சிறப்​புடன் நடை​பெறுகிறது. தியாக​ராஜ சுவாமிகள் 2,400 கீர்த்​தனை​களை எழு​தி, பாடி​யுள்​ளார். அவர் அதி​கம் ராம நாமத்தை உச்​சரித்​துப் பாடி​யுள்​ளார்.

இந்த விழா பாரம்​பரிய​மாக நடை​பெற்று வரு​கிறது. தியாக​ராஜ சுவாமிகள் இயற்​றிய 2,400 கீர்த்​தனை​களும் ஒரு இசை பாரம்​பரிய​மாகும். இசை பாரம்​பரி​யத்தை தொடர்ந்து கொண்டு செல்​லும் சபா​வும் ஒரு பாரம்​பரி​யம். அதை நடத்​தும் குடும்​பத்​தினரும் ஒரு பாரம்​பரி​யம்.

இவ்​வாறு 3 பாரம்​பரிய​மும் இணைந்​த​தால்​தான் திரு​வை​யாறு மண்​ணில் எங்கு பார்த்​தா​லும் தியாக​ராஜ சுவாமிகளின் புகழ் நில​வு​கிறது. இங்கு காற்​றில் கலந்​துள்ள சங்​கீதம், இறை உணர்​வு, பக்தி ஆகியவை மக்​களுக்​கும், மண்​ணுக்​கும் தொடர்ந்து நல்​வாழ்வை வழங்​கும். இவ்​வாறு அவர் பேசி​னார்​. தொடர்ந்​து இசை நிகழ்ச்​சிகள்​ நடைபெற்​றன.

<div class="paragraphs"><p>தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழாவை நேற்று குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்த உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார். படம்: ஆர்.வெங்கடேஷ்</p></div>
“இது ஓர் இணக்கமான தீர்வு” - உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்துக்கு ப.சிதம்பரம் பாராட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in