

மேஷ ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரனும் 5-ல் குருவும் 6-ல் சூரியனும் ராகுவும் உலவுவதால் எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். நண்பர்களும் உறவினர்களும் உதவிபுரிவார்கள். பொருள் வரவு அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். மாதர்களது எண்ணம் ஈடேறும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். வாரப் பின்பகுதியில் செலவுகள் சற்று அதிகரிக்கும். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. கண், வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். வாழ்க்கைத் துணைவரால் அனுகூலம் உண்டாகும் கூட்டுத்தொழில் லாபம் தரும்.
நிறங்கள்: புகை நிறம், பொன்நிறம், இளநீலம், வெண்மை, ஆரஞ்சு.
எண்கள்: 1, 3, 4, 6, 9.
பரிகாரம்: சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றவும். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவவும்.
திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, தெற்கு.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 24, 25.
ரிஷப ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும், 4-ல் புதனும் 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தான, தர்மப்பணிகளில் ஈடுபாடு கூடும். கலைத் துறையினருக்கு வெற்றிகள் குவியும். மாதர்களது எண்ணம் ஈடேறும். மாணவர்களது நிலை உயரும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். குடும்ப நலம் சிறக்கும். கணிதம், எழுத்து, பத்திரிகை துறையினர் பலன்பெறுவர். நண்பர்களாலும் உறவினர்களாலும் அனுகூலம் ஏற்படும். மக்கள் நலனில் கவனம் தேவை. தீய பழக்கவழக்கங்கள் வேண்டாம். செய்தொழிலில் சீரான வளர்ச்சி உண்டு. 28-ம் தேதி முதல் சுகம் கூடும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு உண்டாகும். வெளிநாடுகளிலிருந்து எதிர்பார்த்த தகவல் வந்துசேரும். பயணங்களால் அனுகூலம் உண்டு. புதியவர்களிடம் அதிக நெருக்கம் காட்ட வேண்டாம். கைப்பொருளைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும்.
எண்கள்: 5, 6, 7.
பரிகாரம்: துர்க்கைக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம், பச்சை.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 24, 25, 28.
மிதுன ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும் 3-ல் செவ்வாயும் 6-ல் சனியும் 10-ல் கேதுவும் உலவுவதால் துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். எதிரிகள் அடங்குவார்கள். போட்டிகளிலும் பந்தயங்களிலும் வெற்றி கிடைக்கும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். பொறியாளர் நிலை உயரும். வழக்கில் திருப்பம் உண்டாகும். கலைத் துறையினர் வளமடைவார்கள். மாதர்களது நோக்கம் நிறைவேறும். ஆடை, அணிமணிகளின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ பெற வாய்ப்பு உண்டாகும். பொதுநலப் பணியாளர்களுக்கு நற்பெயர் கிட்டும். தொழிலாளர்களது கோரிக்கைகள் இப்போது நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உதவிபுரிவார்கள். சூரியன், புதன், குரு, ராகு சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் அலைச்சல் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை.
பரிகாரம்: குருப்பிரீதி செய்வது நல்லது. திருமாலை வழிபடவும்.
எண்கள்: 6, 7, 8, 9.
நிறங்கள்: ஆரஞ்சு, சிவப்பு, நீலம், மெரூன்.
அதிர்ஷ்டமான தேதிகள் : செப்டம்பர் 25 (பிற்பகல்), 28.
திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு, மேற்கு, தெற்கு.
கடக ராசி வாசகர்களே!
உங்கள் ராசியில் சுக்கிரனும் 2-ல் புதனும் குருவும் 3-ல் சூரியனும் ராகுவும் உலவுவது சிறப்பாகும். வசீகரம் அதிகரிக்கும். புதிய பொருள் சேரும். தம்பதியர் உறவு நிலை திருப்தி தரும். கூட்டுத் தொழில் லாபம் தரும். கலைத் துறையினருக்கு வரவேற்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி காண வழிபிறக்கும். மாணவர்களது திறமை பளிச்சிடும். மாதர்களது எண்ணம் ஈடேறும். பொருளாதார நிலையில் அபிவிருத்தி காணலாம். ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் வருவாய் வரும். ஆசிரியர்கள், ஆன்மிகவாதிகளுக்குச் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். அரசு விவகாரங்களில் திருப்பம் ஏற்படும். பயணத்தால் காரியங்கள் நிறைவேறும். நிறுவன, நிர்வாகத் துறையினருக்கு முன்னேற்றமான போக்கு தென்படும். 28-ம் தேதி முதல் பண நடமாட்டம் மேலும் அதிகரிக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 24, 28.
திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, புகை நிறம், இளநீலம், பொன் நிறம், சிவப்பு.
எண்கள்: 1, 3, 4, 5, 6, 9.
பரிகாரம்: சனி, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்துகொள்வது நல்லது.
சிம்ம ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 12-ல் சுக்கிரன் உலவுவது ஒன்றே கோசாரப்படி சிறப்பாகும். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் வீண் அலைச்சல் ஏற்படும். மனத்தில் ஏதேனும் சலனம் இருந்துவரும். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் உண்டாகும். வீண்பேச்சைத் தவிர்க்கவும். உடல் நலனில் கவனம் தேவை. மக்கள் நலம் சீராகவே இருந்துவரும். கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். ஆடைகள் மற்றும் அணிகலன்கள் சேரும் வாரம் இது. வாரப் பின்பகுதியில் சந்திரன் கேதுவுடன் கூடி 8-ல் உலவுவதால் மனத்துக்குச் சலனத்தைத் தரக்கூடியதொரு சம்பவம் நிகழும். எதிலும் கவனமாக இருப்பது அவசியம். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. கண், இதயம் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். நீண்டநாள் எதிர்பார்த்திருந்த பணம் வந்து சேரும். யாரிடமும் வாக்குவாதம் வேண்டாம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 24, 25.
திசை: தென்கிழக்கு.
நிறங்கள்: வான்நீலம், வெண்மை
எண்: 6.
பரிகாரம்: கோளறு திருப்பதிகம் வாசிக்கவும்.
கன்னி ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 3-ல் சனியும், 11-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். முக்கியமான ஓரிரு எண்ணங்கள் இப்போது நிறைவேறும். கலைத் துறையினருக்கு வரவேற்பு அதிகரிக்கும். மாதர்களது நிலை உயரும். புதிய ஆடை, அணிகலன்களின் சேர்க்கையோ ஆதாயமோ கிடைத்துவரும். தொழிலாளர்களது கோரிக்கைகள் நிறைவேறும். எதிரிகளை சமாளிக்கலாம். இரும்பு, எஃகு, எண்ணெய் வகைகளில் லாபம் கிடைக்கும்.
சமுதாய நல முன்னேற்றப் பணிகளில் ஆர்வம் கூடும். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் அலைச்சல் அதிகரிக்கும். வரவைக் காட்டிலும் செலவுகள் அதிகமாகும். சிக்கனம் அவசியம். மக்களாலும் உடன்பிறந்தவர்களாலும் செலவுகள் ஏற்படும். மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை. பயணங்களில் எச்சரிக்கை அவசியம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 24, 25, 28.
திசைகள்: தென்கிழக்கு, மேற்கு.
நிறங்கள்: வெண்மை, நீலம்.
எண்கள்: 6, 8.
பரிகாரம்:
குருவுக்கும் செவ்வாய்க்கும் பிரீதி, பரிகாரங்கள் செய்யவும். நாகராஜரை வழிபடவும்.