Published : 22 Oct 2015 10:21 AM
Last Updated : 22 Oct 2015 10:21 AM

வார ராசிபலன் 22-10-2015 முதல் 28-10-2015 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு அதிபதி சுக்கிரன் 11-ம் இடத்திலும் குரு, செவ்வாய் ஆகியோருடன் கூடியிருப்பது விசேடமாகும். செல்வம் சேரும். சொத்துக்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். குடும்பநலம் சீராகும். கணவன் மனைவி உறவு நிலை வலுப்பெறும். கூட்டுத் தொழில் லாபம் தரும். திருமணம் ஆகாதவர்களுக்கு வாய்ப்பு கூடிவரும். குழந்தைப்பேறை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு மகப்பேறு பாக்கியம் கிடைக்கும். மக்களால் அனுகூலமும் உண்டாகும். ஊக வணிகம், கொடுக்கல் வாங்கல் லாபம் தரும். வழக்கில் வெற்றி கிடைக்கும். போட்டிப் பந்தயங்களிலும் கூட வெற்றி கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். தந்தை நலனில் அக்கறை தேவைப்படும். 26-ஆம் தேதி முதல் தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 22, 23, 25.

திசைகள்: வடமேற்கு, வடகிழக்கு, தெற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: மெரூன், இள நீலம், வெண்மை, பொன் நிறம், சிவப்பு.

எண்கள்: 3, 6, 7, 9.

பரிகாரம்: சூரியனுக்கும் ராகுவுக்கும் பிரீதி, பரிகாரங்களைச் செய்யவும். காளிகாம்பாளை வழிபடவும்.

***

விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிநாதன் செவ்வாய் 10-ல் வலுத்திருக்கிறார். புதன், ராகு ஆகியோர் 11-ல் சஞ்சரிப்பதும் சிறப்பாகும். மனதில் துணிவு பிறக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் திறம்பட ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். பிரச்சினைகள் குறையும். வழக்குகளிலும் போட்டிப் பந்தயங்களிலும் விளையாட்டுகளிலும் வெற்றி கிடைக்கும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். பொறியாளர் நிலை உயரும். மின்னணு, கணிப்பொறித் துறையில் வருவாய் கூடும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், தரகர்கள், கமிஷன் ஏஜண்டுகள் ஆகியோருக்கெலாம் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். உழைப்புக்கும் அலைச்சலுக்கும் உரிய பயன் கிடைக்கும். நண்பர்க்ளும் உறவினர்களும் உதவி புரிவார்கள். நிலபுலங்கள் சேரும். சொத்துக்களால் வருவாயும் கிடைக்கும்..

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 22, 23, 25.

திசைகள்: தென்மேற்கு, வடக்கு, தெற்கு.

நிறங்கள்: சிவப்பு, வெண்சாம்பல் நிறம், பச்சை.

எண்கள்: 4, 5, 9.

பரிகாரம்: ஆதித்ய ஹ்ருதயம், ஹனுமன் சாலீஸா படிக்கவும்.

***

தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ஜனன ராசிக்கு பாக்யஸ்தானமான 9-ல் குருவும் சுக்கிரனும் செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். சூரியன், புதன், ராகு ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் பொருள் வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். பேச்சாற்றல் பளிச்சிடும். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு கூடும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். நல்லவர்கள் உதவி புரிவார்கள். முன்னேற்றத் தகவல் கிடைக்கும். மனஉறுதி கூடும். அறிவாற்றல் பளிச்சிடும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். திருமணம் ஆனவர்களுக்கு மகப்பேறு பாக்கியம் கிடைக்கும். பயணத்தால் ஆதாயம் உண்டு. பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். தாய் நலனில் கவனம் தேவை. நிலபுலங்கள் தொடர்பான காரியங்களில் விழிப்புடன் ஈடுபடுங்கள்.

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 22, 23, 25.

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: பச்சை, புகை நிறம். வெண்மை, இளநீலம், பொன் நிறம், சிவப்பு.

எண்கள்: 1, 3, 4, 5, 6, 9.

பரிகாரம்: சனி, கேதுவுக்கு அர்ச்சனை செய்யவும். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிசெய்யவும்.

மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும் 8-ல் சுக்கிரனும் 9-ல் புதனும் 10-ல் சூரியனும் 11-ல் சனியும் உலவுவது சிறப்பாகும். அந்தஸ்தும் மதிப்பும் உயரும். பொதுநலப் பணிகளில் ஆர்வம் அதிகமாகும். ஏழைப் பெண்களுக்கு உதவுவீர்கள். குடும்பநலம் சீராகவே இருந்துவரும். பண வரவு சற்று அதிகரிக்கும். எதிரிகளை வெல்லும் சக்தி பிறக்கும். இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்கள், கறுப்பு நிறப்பொருட்கள், கச்சாப்பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். ஆன்மிகவாதிகளுக்கும் அறநிலையப் பணியாளர்களுக்கும் அனுகூலமான போக்கு தென்படும். 8-ல் குருவும் செவ்வாயும் இருப்பதால் எக்காரியத்திலும் பதற்றப்படாமல் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து, பொறுமையாக ஈடுபடுவது நல்லது. 26-ம் தேதி முதல் புனிதமான காரியங்களில் ஈடுபாடு கூடும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 22, 23, 25.

திசைகள்: மேற்கு, வடமேற்கு, வடக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: பச்சை, நீலம், மெரூன்.

எண்கள்: 5, 6, 7, 8.

பரிகாரம்: கந்தவேலை வழிபடவும். குருவுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.

***

கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 7-ல் குருவும் 10-ல் சனியும் உலவுவது சிறப்பாகும். புதன் 8-ல் தன் சொந்த வீட்டில் சஞ்சரிப்பதும் சிறப்பாகும். வார ஆரம்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிக்கனம் தேவை. தாய்நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும். வார நடுப்பகுதியில் பண வரவு சற்று கூடும். நல்லவர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். வியாபாரம் பெருகும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் மதிப்பு உயரும். மாணவர்களது நோக்கம் நிறைவேறும். குடும்ப நலனில் கவனம் தேவை. வீண் வம்பு கூடாது. உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியமாகும். வாழ்க்கைத் துணைவரால் நன்மைகள் ஏற்படும். குடும்ப விவகாரங்களைப் பக்குவமாகச் சமாளிப்பது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 23, 25.

திசைகள்: வடகிழக்கு, மேற்கு, வடக்கு.

நிறங்கள்: பச்சை, நீலம், பொன் நிறம்.

எண்கள்: 3, 5, 8.

பரிகாரம்: சர்ப்ப சாந்தி செய்யவும். காளஹஸ்தி சென்று வழிபடலாம். விநாயகருக்கும் துர்க்கைக்கும் அர்ச்சனை செய்துவழிபடுவது சிறப்பாகும்.

***

மீன ராசி வாசகர்களே

உங்கள் ஜன்ம ராசிக்கு 6-ல் செவ்வாய் உலவுவது சிறப்பாகும். எதிர்ப்புக்களைச் சமாளிக்கும் சக்தி பிறக்கும். பொறியியல், சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகள் லாபம் தரும். மின்னணு, கணிப்பொறி துறையில் வருவாய் கிடைக்கும். மக்களால் அனுகூலம் ஏற்படும். குரு 6-லும், சூரியன் 8-லும் இருப்பதால் பெரியவர்கள் மற்றும் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. சுப காரியங்கள் நிகழத் தடையும் தாமதமும் ஏற்படும். பொருள் கொடுக்கல் வாங்கலில் விழிப்புத் தேவை. பிறரது மனம் புண்படும்படி நடக்கவேண்டாம். கலைஞர்கள், உத்தியோகஸ்தர்கள், அரசியல்வாதிகள், அரசுப்பணியாளர்கள் ஆகியோர் பொறுப்புடன் செயல்படவும். வியாபாரிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவி வரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 22, 25.

திசை: தெற்கு.

நிறம்: சிவப்பு.

எண்: 9

பரிகாரம்: நவக்கிரகங்களையும் வழிபடவும். சிவனடியார்களுக்கு உதவி செய்யவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x