Published : 15 Jun 2017 03:22 PM
Last Updated : 15 Jun 2017 03:22 PM

ஜோதிடம் என்பது அறிவியலா?- 14: கடக, மகர மற்றும் பூமத்திய ரேகை மூலம் உலக நாடுகளின் ராசிகளை கண்டறிதல்

நாம் வாழும் பூமி சூரியனின் ஈர்ப்புவிசையால், நீள் வட்ட பாதையில் சூரியனை சுற்றி வருகிறது. இந்த நிகழ்வு இரவு பகல் மற்றும் பூமியின் தட்பவெப்ப நிலைகளுக்கு காரணமாகிறது.

பூமி சூரியனை மேற்கில் இருந்து கிழக்காக சுற்றி வருகிறது. இதனால் சூரியன் கிழக்கில் இருந்து மேற்காக நகருவது போன்றதோற்றம் உண்டானது.

நம் முன்னோர்கள் சூரியனின் ஒளிபடும் மாதங்களை குறிக்க, சூரியனின் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி நகரும் தன்மைகளை கணித்து சூரியனின் பயணத்தை, 'தட்சினாயணம்' மற்றும் 'உத்திராயணம்' எனப் பிரித்தனர். சூரியன் உச்சம் பெற்று இருக்கும் சித்திரை மாதத்தில் இருந்து கணக்கிட்டனர்.

தட்சினாயணம் (தட்சிணம் + அயணம்) = தட்சிணம் - தெற்கு, அயணம் - பயணம். சூரியன் தெற்கு திசையை தேர்ந்தெடுத்து, கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி செல்லும் பயணம். உத்திராயணம் (உத்திரம் + அயணம்) = உத்திரம் - அடுத்த, அயணம் - பயணம், ஆதாவது தட்சினாயணம் முடிந்து, சூரியன் மேற்கொள்ளும் அடுத்த பயணம் என்பதே இதன் பொருள். உத்திராயணம் என்பது சூரியன் வடக்கு திசையை தேர்ந்தெடுத்து, கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி செல்லும் பயணம். ஜோதிடத்தில் சூரியன் உச்சம் பெற்ற மேஷத்தில் இருந்து, ஒவ்வொரு ராசியாக நகர, அதன் உச்ச பலம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, மிதுனத்தை அடைந்தவுடன், உச்ச பலம் தீர்ந்து ஆட்சி பலம் பெறுகிறார்.

இதில் உச்சம் பெற்ற நிலையை ஆரோகணம் என்றும், அதன் உச்சபலம் குறைந்து வரும் நிலையை அவரோகணம் என்றும் உரைக்கின்றன்ர். இந்த வார்த்தைகள் சங்கீத ஸ்வரங்களிலும் உபயோகப்படுத்தப்படுகிறது என்பது உப சங்கதி.

அதாவது, சித்திரையில் (மேஷம்) இருந்து ஆனி மாதம் (கடகம்) வரை இந்த நிலை கோடைகாலம் ஆகும். இதில் மேஷத்தில் ஆரோகணம், மிதுனத்தில் அவரோகணம். ஆடியில் (கடகம்) இருந்து புரட்டாசி மாதம் (கன்னி) வரை சூரியன் இருக்கும் நிலை இலையுதிர் காலம் ஆகும். இதில் மிதுனத்தில் சூரியன் அவரோகணத்தில் இருந்து மீண்டும் கன்னியில் ஆரோகணம். ஐப்பசி (துலாம்) மாதம் இருந்து மார்கழி தனுசு) வரை சூரியன் இருக்கும் நிலை குளிர்காலம் காலம் ஆகும். இதில் ஐப்பசியில் சூரியன் ஆரோகணத்தில் இருந்து மீண்டும் தனுசில் அவரோகணம் அடைகிறார்.இதுவரை, சூரியன் பயணம் செய்தது தட்சிணாயணம் ஆகும்.

பிறகு, சூரியன் மகரத்தில் இருக்கும் காலம், பொங்கல் என்றும் மகர சங்கராந்தி கொண்டாடப்படும், இளவேனில் காலம் தொடங்குகிறது. சூரியன் தை மாசத்தில் இருந்து (மகரத்தில்) மீனம் செல்லும் வரை இருக்கும் நிலை "இளவேனில்". இள - இதமான வேனில் - தென்றல் தரும் காலம். இங்கே சூரியன் மகரத்தில் அவரோகணம் மீனத்தில் ஆரோகணம். இது போல மகரத்தில் இருந்து மிதுனம் வரை சூரியன் செல்லும் காலம், உத்திராயணம் ஆகும். இங்கே உற்று கவனித்தால், கடகத்தில் தட்சிணாயனம் தொடங்கி, மகரத்தில் உத்திராயணம் ஏற்படுகிறது. அதாவது கடகத்தில் சூரியன் இருக்கும் காலம், பூமி மகரத்திலும், மகரத்தில் சூரியன் இருக்கும் காலம் பூமி கடக ராசியிலும் இருப்பதாக கொள்ளலாம். இங்கே தட்சிணாயனம் இரண்டு பருவ காலங்களையும் (இலையுதிர் காலம், குளிர்காலம்) மற்றும் உத்திராயணம் (இளவேனிற்காலம், கோடைகாலம்).

இவ்வாறு சூரியன் பயணிக்கும் பாதையை வைத்து, சூரிய ஒளி பூமியில் படும் நிலையை கணித்து, கோடைகாலம், இலையுதிர் காலம், குளிர்காலம், இளவேனில் காலம் என முன்னோர்கள் வகுத்தனர்.

பூமி மூன்று மாய கோடுகளால் பிரிக்கப்பட்டுள்ளது. அவை 1. கடக ரேகை 2. பூமத்திய ரேகை 3. மகர ரேகை கடக ரேகை.

கடக ரேகை

பூமியின் தட்சிணாயன பயணம் கொண்டு சூரிய ஒளிபடும் இடங்களில், இலையுர்திர் காலம் மற்றும் குளிர் காலம் சம அளவிலும் கோடைகாலம் மற்றும் இளவேனிற்காலம் குறைவாகவும் இருப்பதை காணலாம்.

மகர ரேகை

மகர ரேகை என்பது பூமியின் உத்திராயண பயணம் கொண்டு சூரிய ஒளிபடும் இடங்களில், இளவேனிற் காலம் மற்றும் கோடை காலம் காலம் சம அளவிலும், இலையுதிர் காலம் மற்றும் குளிர்காலம் குறைவாகவும் இருப்பதை காணலாம்.

பூமத்திய ரேகை

மகரம் மற்றும் கடகத்தில் இடைப்பட்ட ராசியான மேஷத்தை அடிப்படையாக எடுத்து, அங்கே சூரியன் உச்சம் பெறுவதை கொண்டு, பூமத்திய ரேகை பகுதியில், சூரியனின் அதீத வெப்பம் படர்வதை காண முடிகிறது. இது கோடை காலம் மற்றும் இளவேனிர்காலத்தின் இடைப்பட்ட பகுதியாக கொண்டு அதிக பாலைவனங்கள் இருப்பதை பார்க்கமுடிகிறது.

இதில் இருந்து பூமியில் வரையப்பட கடக, மகர மற்றும் பூமத்திய ரேகைகள் ஜோதிடத்தை மையமாக கொண்டே வரையப்பட்டன. இந்த ஆய்வை அடிப்படையாக கொண்டு, ஜோதிட காலசக்கரத்தில் நாடுகளை குறிக்கும் ராசிகளை கண்டறியலாம். அதாவது பூமத்திய ரேகை படரும் நாடுகள், மேஷத்தை மையமாகவைத்து, அதன் திரிகோணத்தில் மேஷம், சிம்மம் மற்றும் தனுசு வருபவை நெருப்பு ராசிகள், பூமத்திய ரேகை பகுதி அதிக வெப்பம் கொண்டதால் அவற்றை நெருப்பு ராசி என்பதே சான்று.

அது போல, மகர ரேகை படரும் நாடுகளை, மிதமான வெப்பம் பரவும் ரிஷபம், கன்னி மற்றும் மகரம் கொண்டு வகுக்கலாம்.

அது போல, கடக ரேகை படரும் நாடுகளை, சம அளவு வெப்பம் பரவும் கடகம், விருச்சிகம் மற்றும் மீனம் என கொண்டு வகுக்கலாம்.

நெருப்பு ராசிகள் - பூமத்திய ரேகை படரும் பாலைவனம், அதிக வெப்பம் தகிக்கும் நாடுகள். பீடபூமிகள்.

நில ராசிகள் - விவசாயம் தழைக்கும் நாடுகள், சதுப்பு நில நாடுகள், அடர்ந்த காடுகளை கொண்ட நாடுகள்.

காற்று ராசி - பனி படர்ந்த சூரிய ஒளி மிகவும் குறைவாக படும் நாடுகள்.

நீர் ராசிகள் - தீவுகள், தீபகற்பம், நீரால் சூழப்பட்ட நாடுகள் என பிரிக்கலாம்.

(மேலும் அறிவோம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x