

நம்மாழ்வாரும் நால்வரும் என்ற தலைப்பில் மார்ச் 25-ம் தேதி சனிக்கிழமையன்று, மாலை 6 மணிக்கு சென்னை எல்டாம்ஸ் சாலையில் உள்ள தத்துவலோகா அரங்கில், இசை உரை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதுபோன்ற பேருரை உள்ளிட்ட இசை நிகழ்ச்சியொன்று பிரதீப் சக்ரவர்த்தி, பாடகி முனைவர் விஜயலட்சுமி சுப்ரமணியம் ஆகியோர் ஏற்கெனவே இணைந்து வழங்கியுள்ளனர். அத்தொடரின் 0மூன்றாம் பகுதியாக இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
முன்னர் நடத்தப்பட்ட அந்நிகழ்ச்சியில் திவ்ய பிரபந்தத்தின் முதல் பகுதியில் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாளின் வாழ்க்கை வரலாறு, அவர்களது படைப்புகள் குறித்து விளக்க நிகழ்ச்சியாக நடந்தது.
சின்னக் கண்ணனுக்கு அப்பம் படைத்து பெரியாழ்வார் தன் அன்பினை வெளிப்படுத்தியதை விஜயலட்சுமி, பெரியாழ்வார் பாசுரங்களை நளினகாந்தி, நாட்டைக் குறிஞ்சி ஆகிய ராகங்களில் இசைத்ததன் மூலம் அறிய முடிந்தது.
சொற்பொழிவின் மூலம் இப்புனிதர்கள் வாழ்ந்த வாழ்க்கைப் பற்றி பல வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்தினார் பிரதீப் சக்ரவர்த்தி. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இட்லி, தோசை போன்ற உணவு வகைகள் இருந்தன என்பது புதுச்செய்தியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.