Published : 05 Sep 2018 06:29 PM
Last Updated : 05 Sep 2018 06:29 PM

வார ராசிபலன் செப்டம்பர் 06 முதல் 12-ஆம் தேதி வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் வெளியூர்ப் பயணங்களும் அதனால் லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். சென்ற வாரத்தை விட அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.முக்கியமான நிறுவனங்களின் ஆதரவு இருப்பதால் வியாபாரம் பன்மடங்காக அதிகரிக்கும்.உத்தியோகஸ்தர்களுக்கு அனுகூலம் உண்டாகும். வெளியூர் பிரயாணம் மேற்கொள்ள நேரிடும்.சிக்கல்கள் பிறரால் ஏற்பட்டாலும் அதை எளிதில் சமாளித்து விடும் தைரியம் உண்டாகும். புதிய வண்டி, வாகனம் வாங்க யோகம் உண்டாகும்.

குடும்பப் பொறுப்புகள் காரணமாக கடினமாக உழைக்க நேரும். பெண்களுக்கு, உயர்வான வாரம் என்றே சொல்ல வேண்டும். சிலருக்கு உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டி வரலாம். கலைத் துறையினர் வெளியூர் செல்ல நேரிடலாம். அரசியல்வாதிகளுக்கு, உடன் இருப்பவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். மாணவர்கள் விளையாட்டுகள், போட்டிகளில் கலந்து கொள்வதனால் சான்றிதழ், பரிசுப் பொருட்களைப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, தெற்கு

எண்கள்: 2, 5, 6

நிறங்கள்: வெள்ளை பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபட சங்கடங்கள் நீங்கும்.

 

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அதிகமாக ஆன்மீகப் பயணங்களைமேற்கொள்வீர்கள். தொழில் ரீதியான பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும்.பங்குதாரர்களிடமிருந்து கசப்பு நீங்கித் தொழிலை விரிவுபடுத்துவதற்கான திட்டத்தைச் செயல்படுத்துவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அனுகூலம் உண்டாகலாம். மேலதிகாரிகளின் கிடுக்குப்பிடியில் சிக்கித் தவிப்பீர்கள். சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும்.கோபத்தைக் குறைத்துக் கொண்டால் பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம். குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளை  முன்னின்று செய்து முடிப்பீர்கள்.

குடும்பத்தில் நிதிநிலைமை சரியாக இருப்பதால் தேவையான அனைத்து வசதிகளும் தானாகவே வந்து சேரும். வரன் தேடும் முயற்சிகளில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். பெண்களுக்கு, குடும்ப நிர்வாகத்தைக் கவனிப்பதில் சிக்கல்கள் இருந்தாலும் அதைத் திறம்படச் செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினருக்கு தேக்க நிலை மாறும். அரசியல்வாதிகளுக்கு, தேவையான பண உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு இது சந்தோஷமான வாரம். நண்பர்களுடன் இன்பச்சுற்றுலா சென்று வருவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்

திசைகள்: வடக்கு, கிழக்கு

எண்கள்: 3, 9

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்

பரிகாரம்: தினமும் கந்த குரு கவசம் சொல்லி வணங்கி வரவும்.

 

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வார்கள். தொழிலில் பங்குதாரர்களிடமிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தொழில் முனைவோர் கேட்ட இடங்களிலிருந்து நிதி உதவி கிடைக்கப் பெறுவீர்கள்.உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலை நிமித்தமாக வெளியூர்களுக்குச் சென்று வர நேரலாம். உடன் பணிபுரிபவர்களால் சற்று தொல்லைகள் வரலாம். குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருக்கும்படியான சூழ்நிலை அமையும்.ராசியில் சனி இருந்தாலும் பெரிய தீமைகள் ஒன்றும் நடப்பதற்கு வாய்ப்பில்லை.

வீடு, வாகனம் வாங்குவதில் இழுபறி நிலை மாறும். பெண்களுக்கு அண்டை வீட்டாருடன் பேசும் போது வார்த்தைகளில் நிதானம் தேவை. கலைத் துறையினருக்கு போட்டிகள் இருந்தாலும் அதைச் சமாளித்து லாபத்தை ஈட்டுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, காரியங்களில் தடங்கல்கள் நீங்கும்.மாணவர்களுக்கு, மேல்கல்வி பயில வேண்டுமென்ற விருப்பமிருந்தால் முயற்சிகளைச் செய்யலாம். கடின உழைப்பினால் நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: கிழக்கு, தெற்கு

எண்கள்: 1, 3

நிறங்கள்: மஞ்சள், சிவப்பு

பரிகாரம்: சிவன் கோயிலுக்குச் சென்று வந்தால் தொழிலில் முன்னேற்றம் இருக்கும்.

 

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சகோதர சகோதரிகளுடன் கருத்து வேறுபாடு வரலாம். வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். தொழிலாளர்களிடம் ஏதாவது பிரச்சினை இருக்குமாயின் அதை முன்னின்று தீர்த்து வைத்து தொழிலைச் செவ்வனே நடத்துவீர்கள்.உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பழைய கடன்கள் வசூலாகும்.குடும்பத்தில் தூரத்திலிருந்து வரும் செய்திகள் மனத்துக்கு மகிழ்ச்சியைத் தரும். தொடர்பில் இல்லாத நெருங்கிய உறவினர் வீடு தேடி வருவார்.

வீடு, நிலத்தில் பணத்தை முதலீடு செய்து நல்ல லாபத்தைப் பெறலாம். பெண்கள் வரவுக்கு ஏற்ற செலவு செய்வது நன்மையைத் தரும்.கலைத் துறையினருக்கு, புதிய முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் சிறந்த முன்னேற்றம் ஏற்படும். அரசியல்வாதிகளின் செயல்திறன் அதிகரிக்கும். மாணவர்கள் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி

திசைகள்: தெற்கு

எண்கள்: 5, 6, 9

நிறங்கள்: நீலம், பச்சை

பரிகாரம்: வராகி அம்மனுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பது அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

 

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டு வேலை செய்வீர்கள். ரகசியங்களைக் காப்பாற்றுவீர்கள்.தொழில், வியாபாரம் திருப்திகரமாக இருக்கும். வங்கி, நிதி நிறுவனங்களிடமிருந்து உதவிகள் எளிதில் கிடைக்கும். சிறு வியாபாரிகள் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம். உத்தியோகத்தில் நற்பெயர் கிடைக்கும். நிலுவையில் இருந்த சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. சில வாய்ப்புகள் தட்டிப்போனதற்குக் காரணமாக இருந்தவர்கள் தாங்களே முன்வந்து நன்மை செய்வார்கள். குடும்பத்துக்குள் சுமூகமான சூழ்நிலை நிலவும். வீடு தேடி வந்து மகான்கள் நல்வாக்கு சொல்வார்கள்.

வயிறு சம்மந்தமான பிரச்சினைகள் சிலருக்கு வரலாம். பெண்களுக்கு, அமைதியாக இருக்க வேண்டியது அவசியம். குடும்ப நிர்வாகத்தில் பிரச்சினை வராது.அரசியல்வாதிகளுக்கு, புதிய முயற்சிகலில் இறங்குவதற்கு கிரக நிலைகள் சாதகமாக உள்ளன.கலைத் துறையினருக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு வாய்ப்புகள் வரும். மாணவர்களுக்கு பொறுமையும் நிதானமும் தேவை. ஆசிரியரின் கவனம் உங்கள் மேல் இருக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி திசைகள்: மேற்கு, வடக்கு எண்கள்: 5, 6 நிறங்கள்: வெளை, பச்சை பரிகாரம்: முருகனுக்கு நெய் விளக்கேற்றி வழிபட குடும்ப பிரச்சினைகள் அகலும்.

 

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் கல்வி தொடர்பான விஷயங்களில் சிறந்து விளங்குவீர்கள். சிலர் பெரிய சாதனைகளும் செய்வீர்கள். தொழிலில் தடைபட்டிருந்த நிறுவனங்களிலிருந்து வர வேண்டிய வாய்ப்புகள் வந்து சேரும். வருமானமும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சந்தோஷமான வாரம் இது. உங்களைத் தேடி புது வாய்ப்புகள் துரிதமாக வரும். வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள், தாயகத்துக்குத் திரும்புவதற்குச் செய்யும் முயற்சி பலிக்கும். குடும்பத்தில் வருமானத்துக்குக் குறைவிருக்காது.

தொலைபேசி,  கடிதம் வாயிலாக ஒரு நற்செய்தியை எதிர்பார்க்கலாம்.சிலருக்கு மனநிம்மதி இல்லாமல் தூக்கம் வராமல் தவிப்பீர்கள். மொத்தத்தில் நன்மையும்,தீமையும் கலந்தே இருக்கும். பெண்கள் கவனமாக இருக்க வேண்டிய வாரம் இது. மாமியார், மருமகள் வாக்குவாதத்தைத் தவிர்க்க வேண்டும். கலைத் துறையினருக்கு, எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு மனத்தில் இருந்த வருத்தங்கள் நீங்கும். மாணவர்கள் சிறந்த மதிப்பெண்களை எதிர்பார்க்கலாம். மேற்படிப்புக்கு முயன்றவர்கள் முயற்சிக்குப் பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்

திசைகள்: வடக்கு, மேற்கு

எண்கள்: 3, 9

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்

பரிகாரம்: சித்தர்களின் ஜீவ சமாதியை வழிபட மனம் ஒருநிலைப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x