பாவமெல்லாம் போக்கும் பகவதாஷ்டமி இன்று! - கடன் பிரச்சினை தீர்ப்பார் காலபைரவர்!

பாவமெல்லாம் போக்கும் பகவதாஷ்டமி இன்று! -
கடன் பிரச்சினை தீர்ப்பார் காலபைரவர்!
Updated on
1 min read

இன்று ஆனி மாதம் (25.6.19) செவ்வாய்க்கிழமை தேய்பிறை அஷ்டமி. இதை பகவதாஷ்டமி என்பார்கள். இந்தநாளில், பைரவரையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு பிரார்த்தனை செய்துகொண்டால், நம் பாவமெல்லாம் பறந்தோடும்; கவலைகள் அனைத்தும் காணாமல் போகும். கடன் தொல்லையில் இருந்தும் எதிரிகளின் தொல்லைகளில் இருந்தும் விடுபடலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
அஷ்டமி நாட்களில் பைரவரை வணங்குவது போல், தட்சிணாமூர்த்தியையும் அர்ச்சனை செய்து வழிபடுவதும் விரதமிருந்து பிரார்த்தனை செய்வதும் நல்ல பலன்களைத் தரும். 

ஒவ்வொரு அஷ்டமிக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

* சித்திரை தேய்பிறை அஷ்டமி - ஸ்நாதனாஷ்டமி
* வைகாசி தேய்பிறை அஷ்டமி - சதாசிவாஷ்டமி
* ஆனி தேய்பிறை அஷ்டமி -  பகவதாஷ்டமி
* ஆடி தேய்பிறை அஷ்டமி - நீலகண்டாஷ்டமி
* ஆவணி தேய்பிறை அஷ்டமி - ஸ்தானுஷ்டாமி
* புரட்டாசி தேய்பிறை அஷ்டமி - ஜம்புகாஷ்டமி
* ஐப்பசி தேய்பிறை  அஷ்டமி -  ஈசான சிவாஷ்டமி
* கார்த்திகை தேய்பிறை அஷ்டமி - ருத்ராஷ்டமி

* மார்கழி தேய்பிறை அஷ்டமி - சங்கராஷ்டமி
* தை தேய்பிறை அஷ்டமி - தேவ தேவாஷ்டமி
* மாசி தேய்பிறை அஷ்டமி - மகேஸ்வராஷ்டமி
* பங்குனி தேய்பிறை அஷ்டமி - திரியம் பகாஷ்டமி

அஷ்டமி நாட்களில் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்வதும் விரதமிருப்பதும் நல்ல பலன்களைத் தரும். அஷ்டமி விரதமிருப்பவர்கள் அழகிய உருவத்தைப் பெறுவார்கள். உடல் ஊனமில்லாமலும் செல்வச் செழிப்புடனும் இருப்பார்கள் என்று விவரிக்கின்றன சிவாகம நூல்கள்.

வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளும் தீர இந்த விரதத்தை, அஷ்டமி விரதத்தைத் தொடர்ந்து அனுஷ்டித்து வாருங்கள். இன்றைய பகவதாஷ்டமி யில் பைரவரை தரிசனம் செய்யுங்கள். நான்குபேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குங்கள். கடன் தொல்லை தீரும். எதிரிகள் தொல்லை இனியில்லை. எதிர்ப்புகள் அனைத்தும் தவிடுபொடியாகும்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in