

குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்க இந்த மந்திரத்தைச் சொன்னால் போதும்... விரைவில் கணவன் மனைவிக்கு ஒற்றுமை மேலோங்கும் என்பது உறுதி என்கிறார்கள் ஆச்சார்யர்கள். இந்த ஸ்லோகத்தை வெள்ளிக்கிழமை மற்றும் தினமுமே கூட சொல்லி வந்தால் குடும்பத்தார் மனதில் உள்ள வேற்றுமைகள் தீர்ந்து, ஒற்றுமையாக வாழலாம்.
“மஹாதேவீம் மஹாசக்திம் பவானீம்
பவவல்ல பாம்பவார்திபஞ்ஜநகரீம்
வந்தே த்வாம் லோகமாதரம்ஜகத்கர்த்ரீம்
ஜகத்தாத்ரீம் ஜகத்ஸம்ஹாரகாரிணீம்முனிபி:
ஸமஸ்துதாம் பத்ராம் வந்தேத்வாம் மோக்ஷதாயினீம்”
இதன் அர்த்தம் என்ன தெரியுமா?
மகாதேவனுடைய மனைவியே. மிகுந்த சக்தி வாய்ந்தவளே. பவானி என்று அழைக்கப்படுபவளே. பக்தர்களின் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் மனக் கவலைகளைப் போக்குகிறவளே. அனைத்து உலகங்களுக்கும் தாயானவளே. தங்களை நமஸ்கரிக்கிறேன்.
உலகைப் படைப்பவளே, படைத்ததைக் காப்பவளே, கடைசியில் அதை அழிக்கவும் செய்பவளே. முனிவர்களால் துதிக்கப்படுபவளே. பக்தர்களுக்கு எந்நாளும் மங்கலத்தை அளிப்பவளே. முக்தியை தரவல்லவளே, தங்களை நமஸ்கரிக்கிறேன்!
இந்த மந்திரத்தை, குளித்து, பூஜையறையில் விளக்கேற்றி அமர்ந்துகொண்டு, இந்த மந்திரத்தைச் சொல்லி வாருங்கள். தம்பதியிடையே ஒற்றுமை மேலோங்கும். கருத்துவேற்றுமைகள் அகலும்.