Published : 24 Jun 2019 09:01 AM
Last Updated : 24 Jun 2019 09:01 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: இலக்கை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பிள்ளைகளின் அடிமனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வீர்கள்.
**
ரிஷபம்: அதிரடி திட்டங்கள் தீட்டி செயல்படுத்துவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு.
**
மிதுனம்: பிரபலங்களின் சந்திப்பால் ஆதாயம் உண்டு. அரசு, வங்கி காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். தாய்வழி உறவினர்களால் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும்.
**
கடகம்: குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்துகொண்டு, அதற்கேற்ப செயல்படுவீர்கள். முக்கிய கோப்புகளை கவனமாக கையாளுங்கள். வரவேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள்.
**
சிம்மம்: சாதுர்யமாகப் பேசி கடினமான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று நடப்பார்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.
**
கன்னி: பிள்ளைகளை நல்வழிபடுத்துவீர்கள். அவர்களது எதிர்காலம் கருதி முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இழுபறியாக இருந்த வழக்கு விவகாரங்கள் நல்லபடியாக முடியும்.
**
துலாம்: நம்பிக்கை, உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். தம்பதியர் இடையே கருத்து வேறுபாடுகள் நீங்கும். தந்தை உடல்நிலை சீராக இருக்கும்.
**
விருச்சிகம்: மனதில் புதிய எண்ணங்கள் தோன்றும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணவரவு, பொருள் வரவு உண்டு. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.
**
தனுசு: எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கிடைப்பதால், திடீர் செலவுகள் வந்தாலும்,  சமாளிப்பீர்கள். இழுபறியான காரியங்களை பேச்சுத் திறமையால் விரைந்து முடிப்பீர்கள்.
**
மகரம்: கணவன் - மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவு, பொருள் வரவு கூடும். பிள்ளைகளின் எண்ணங்களை அறிந்து பூர்த்திசெய்வீர்கள்.
**
கும்பம்: தடைபட்ட வேலையை உங்கள் வித்தியாசமான அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சில சிக்கல்களுக்கு உங்கள் அவசர முடிவுகள்தான் காரணம் என்பதை உணர்வீர்கள்.
**
மீனம்: எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு பார்க்கவேண்டி வரும். உறவினர்களால் திடீர் அலைச்சல், செலவுகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் சற்று தாமதமாகும்.******

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x