

எந்த எண்ணெய் கொண்டு தீபமேற்ற வேண்டும். அப்படி ஏற்றுவதால் ஒவ்வொரு எண்ணெய் தீபத்துக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு என்கின்றனர் ஆச்சார்யர்கள்.
முதலில், எந்த எண்ணெய் கூடாது என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். அதாவது சூரியகாந்தி எண்ணெய் பயன்படுத்தவே கூடாது. அதேபோல், கடலை எண்ணெய் கொண்டு தீபமேற்றவே கூடாது. சுட்ட எண்ணெய் தெரியும்தானே. வேறு எதற்காகவோ, அடுப்பில் வைத்து சுட்டிருப்போம். ஏதேனும் பயன்படுத்தியிருப்போம். அதையும் பயன்படுத்தக்கூடாது.
சரி... எந்த எண்ணெய் கொண்டு தீபமேற்றினால் என்னென்ன பலன்கள் என்பதைப் பார்ப்போம்.
நெய் கொண்டு விளக்கேற்றினால் செல்வம் சேரும். நினைத்த காரியம் யாவும் விரைவில் நடந்தேறும்.
நல்லெண்ணெய் கொண்டு விளக்கேற்றினால் ஆரோக்கியம் கூடும். மருத்துவத்துக்குச் செலவு செய்த நிலை மாறும்.
தேங்காய் எண்ணெய் கொண்டு விளக்கேற்றினால், பேச்சில், முகத்தில், செயலில் வசீகரம் கூடும். எல்லோருக்கும் பிடித்தவராக வாழலாம்.
இலுப்பை எண்ணெய் கொண்டு விளக்கேற்றினால், காரியத்தில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். காரியம் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
விளக்கெண்ணெய் கொண்டு தீபமேற்றினால், பேரும்புகழும் கிடைக்கப் பெறலாம். மதிப்பும் மரியாதையும் கூடும்.
வேப்பெண்ணெய் கொண்டு விளக்கேற்றினால், குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். வீட்டில் அமைதியும் ஆனந்தமும் குடிகொள்ளும்.
பஞ்சக் கூட்டு எண்ணெய் என்று ஐந்து எண்ணெய்களும் கொண்டு தீபமேற்றி வழிபட்டால், இறையருளும் குலதெய்வத்தின் அருளும் கிடைக்கப்பெற்று, இனிதே வாழலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.