Published : 02 Jun 2019 08:58 AM
Last Updated : 02 Jun 2019 08:58 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சந்தோஷம் நிலைக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். தடைபட்ட வேலைகள் முடியும்.

ரிஷபம்: எதற்கெடுத்தாலும் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். திடீர் பயணம் உண்டு.

மிதுனம்: பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். உடல் அசதி, மனச்சோர்வு ஏற்படக் கூடும். அக்கம்பக்கத்தில் உள்ள சிலரின் செயல்பாடுகள் கோபம், எரிச்சலை உண்டாக்கும்.

கடகம்: அதிரடியாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பழைய கடனைப் பைசல் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு.

சிம்மம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளைக் கண்டறிந்து ஊக்குவிப்பீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

கன்னி: தயக்கம், காரியத் தாமதம் யாவும் நீங்கும். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பழைய பிரச்சினைகளைத் தீர்ப்பீர்கள். உறவினர்களால் அனுகூலம் உண்டு.

துலாம்: செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். கணவன் - மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். சிலர் உதவுவதைப் போல் உபத்திரவம் தருவார்கள்.

விருச்சிகம்: தன் பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படுவீர்கள். சகோதரர் வகையில் பயனடைவீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும்.

தனுசு: நீண்ட நாட்களாக விலகியிருந்த உறவினர்கள், நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார்.

மகரம்: நீண்டநாள் கனவு நனவாகும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும்.

கும்பம்: அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். தாயாருடன் எதிர்பாராத வகையில் கருத்து மோதல்கள் வரக்கூடும். புது வேலை கிடைக்கும்.

மீனம்: சவாலில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x