தானம் செய்யுங்கள்... அரசு வேலை நிச்சயம்!

தானம் செய்யுங்கள்... அரசு வேலை நிச்சயம்!
Updated on
1 min read

சனிக்கிழமையில் சனீஸ்வரரை வணங்கி, இயலாதவர்களுக்கு தானம் செய்து வந்தால், விரைவில் அரசு மற்றும் வங்கி வேலை கிடைப்பது உறுதி. மேலும் குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் அனைத்தும் தீரும் என்பது ஐதீகம்.

அரசு வேலை கிடைக்கவேண்டும், வங்கியில் வேலைக்குச் சேர வேண்டும் எனும் கனவில் இருப்பவர்கள் ஏராளம். இன்னும் பலர், படித்த படிப்புக்கு ஏற்ற நல்ல வேலை கிடைக்கவில்லையே என்று புலம்புபவர்களும் இருக்கிறார்கள்.

இவற்றுக்கெல்லாம் எளியதொரு பரிகாரம் உண்டு என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

சனீஸ்வரருக்கு உகந்த கிழமை, சனிக்கிழமை. இந்த நாளில் மட்டும்தான் இந்தப் பரிகாரம் செய்யவேண்டும். சனிக்கிழமையன்று, சனீஸ்வரருக்கு உகந்த கருப்புத்துணியில், கொஞ்சம் உளுந்து எடுத்துக் கொண்டு, அதில் எட்டு எள்ளுருண்டைகளை வைத்து, சனீஸ்வரரை நினைத்து, நைவேத்தியமாகப் படைக்கலாம். பிறகு அந்த எள்ளுருண்டை மற்றும் உளுந்தை, காகத்துக்கு அல்லது பசுவுக்கு அளிக்கலாம்.

அப்போது ஆலயத்தில் சனீஸ்வரருக்கு எள் தீபமேற்றி வழிபட்டு பிரார்த்தனை செய்துகொள்ளலாம். மேலும் உங்களால் முடிந்த அளவுக்கு, எவருக்கேனும் ஏதேனும் தானம் வழங்கலாம். இப்படித் தொடர்ந்து எட்டு வாரங்கள் தொடர்ந்து தானம் செய்யவேண்டும்.

ஒருவாரத்தில் எவருக்கேனும் போர்வை வழங்கலாம். அடுத்த வாரத்தில் வஸ்திரம் தானம் செய்யலாம். இன்னொரு வாரத்தில் எவருக்கேனும் காலுக்கு செருப்பு வாங்கிக் கொடுக்கலாம். இன்னொரு வாரம் எட்டுப்பேருக்கு அன்னதானம் செய்யலாம். இப்படியாக தொடர்ந்து எட்டு சனிக்கிழமைகள் தானம் செய்து, சனீஸ்வரரை வழிபட்டு வந்தால், நினைத்தது போலவே அரசு வேலை, வங்கி வேலை அல்லது நல்ல சம்பளத்தில் உத்தியோகம் கிடைக்கப் பெறுவீர்கள்.

மேலும் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். ஏழு பிறவிக்குமான பாவங்கள் விலகும். தனம், தானியம் பெருகும் என்பது ஐதீகம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in