இனிய வாழ்வு அருளும் இலத்தூர் மதுநாதர்

இனிய வாழ்வு அருளும் இலத்தூர் மதுநாதர்
Updated on
1 min read

சுமார் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது இலத்தூர் அறம்வளர்த்த நாயகி சமேத மதுநாத சுவாமி கோவில். திருநெல்வேலி மாவட்டம், தென்காசியை அடுத்துள்ளது இலத்தூர்.

அகத்தியர் தென்னகம் வந்தபோது இத்தலம் வந்து மணல் லிங்கம் அமைத்து சந்தியா கால வழிபாட்டை மேற்கொண்டார் என்பது ஐதீகம். அப்போது அருகிலிருந்த புளியமரத்தில் கூடு கட்டியிருந்த தேனீ கூட்டிலிருந்து தேன் வழிந்து லிங்கம் மீது சொட்டி மணல் லிங்கம் தேன் லிங்கமாக மாறியது. வழிபாடு முடிந்ததும் இதனைக் கவனித்த அகத்தியர் மதுநாதா என்று அழைத்து மகிழ்ந்தார்.

அகத்தியருக்கு ஏழரைச் சனி நடைபெற்ற காலத்தில், இங்கு வடக்கு நோக்கி அமர்ந்து சனீஸ்வர ஸ்தோத்திரம் பாடியபோது, சனீஸ்வர பகவான் அகத்தியருக்குக் காட்சியளித்தார். இதன் அடிப்படையில், இங்கு பொங்கு சனியாக சனீஸ்வர பகவான் தனிச்சந்நிதியில், வலம்வந்து வழிபடும் விதம் எழுந்தருளியுள்ளார்.

ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, கண்டகச் சனி நடைபெறுபவர்கள் இங்குவந்து மதுநாதரையும், சனீஸ்வரரையும் வழிபாடுசெய்து, இன்னல்கள் நீங்கி இனிய வாழ்வு பெறலாம்.

மதுநாதரைத் தரிசிக்க

இத்திருக்கோயில் திருநெல்வேலி மாவட்டம் தென்காசியிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சென்னை, மதுரை, திருநெல்வேலியிலிருந்து தென்காசிக்கு ரயில் போக்குவரத்து வசதியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in