Published : 08 Mar 2018 12:37 PM
Last Updated : 08 Mar 2018 12:37 PM

வார ராசிபலன் 08.03.2018 - 14.03.2018 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் உங்களின் பாக்கியஸ்தானத்துக்கு மாறுகிறார். துணிச்சலான சில முடிவுகளை எடுப்பதன் மூலம் உங்களுக்கு நன்மைகளை கிடைக்கும். மனதில் மகிழ்ச்சியான எண்ணங்கள் தோன்றும். திடீரென்று அவசர முடிவை எடுக்க வேண்டியிருக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்துவதால் நண்பர்கள், உறவினரிடம் சுமூகமான நிலை நீடிக்கும். உல்லாசப் பயணம் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். எதிலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நன்மை தரும். திருமண முயற்சிகள் கைகூடும். நிலுவைப் பணம் எதிர்பாராமல் கைக்கு வந்து சேரும். குழப்பம் நீங்கித் தைரியம் உண்டாகும். பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். கணவன் மனைவிக்குள் பிரச்சினைகள் தீரும்.

தந்தை வழியில் விவகாரங்கள் சரியாகும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். வழக்குகளில் சுமுக முடிவுகளைக் காணலாம் . எதிர்ப்புகள் அகலும். அரசியல்வாதிகளுக்கு தொழில், வியாபாரப் போட்டிகள் நீங்கும். நோய் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும். கலைத் துறையினருக்கு எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். பெண்களுக்கு, மனக்குறைகள் நீங்கி நம்பிக்கை உண்டாகும். பணவரவும் இருக்கும். குடும்பப்  பிரச்சினைகளும் தீரும். மாணவர்கள், ஆசிரியர்கள் கூறுவதைக் கேட்டு அதன்படி நடப்பதால் முன்னேற்றம் அடைவார்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: பச்சை, சிவப்பு | எண்கள்: 5, 6, 9

பரிகாரம்: அம்மனுக்கு நெய் விளக்கு ஏற்றி வலம் வரவும்.

 

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் உங்களின் லாபஸ்தானத்திலிருந்து நன்மை செய்கிறார்.உங்களுக்கு நிலம், வீடு வாகனங்களால் லாபம் இருக்கும். தடைபட்ட பணம் கைக்குக் கிடைக்கும். எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபட்டு  வெற்றி காண்பீர்கள்.  அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.  விரும்பத்தகாத ஆசைகள் உண்டாகலாம். தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் ஏற்படும். அனைத்துப் பலன்களும் வந்து சேரும். பூர்வீகச் சொத்துக்களால் லாபம் கிடைக்கும். தர்ம காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரம் செய்பவர்கள்  கவனமாக இருப்பது நல்லது.

உத்தியோகத்திலிருப்பவர்களுக்குப் பதவி உயர்வு தாமதப்படலாம். வெளிநாடு செல்வதில் எதிர்பாராத சிக்கல் ஏற்படலாம். கவனம் தேவை. எதிர்பாலினத்தவரிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம். கணவன் மனைவிக்குள் வாக்குவாதங்கள் உண்டாகலாம். அரசியல்வாதிகள் அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. கடன் கொடுப்பதில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. கலைத் துறையினருக்கு வாய்ப்புகள் வந்து குவியும். பெண்கள், இந்த மாதம் எதிலும் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும். மாணவர்கள், படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். விளையாட்டுகளில் ஈடுபடும் போது கவனம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி

திசைகள்: மேற்கு, தெற்கு

நிறங்கள்: பச்சை, மஞ்சள் | எண்கள்: 1, 5, 8

பரிகாரம்: வெள்ளிக்கிழமை, அருகிலிருக்கும் ஒரு ஆலயத்துக்குச் சென்று 11 முறை வலம் வரவும்.

 

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் வருமானம் அதிகரிக்கும். வசதிகள் பெருகும். உறவினர்களுடன் சுமுக நிலை காணப்படும். வெளியூர், வெளிநாட்டுப் பயணம் செல்ல நேரலாம். நீண்டநாள் பிரச்சினைகள் தீரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பொருளாதார வளம் மேம்படும். தொழில் உன்னத நிலையை அடையும். குடும்பத்தில் முன்னேற்றமும் சுபநிகழ்ச்சிகளும் நடைபெறும். பணவிரயமும் காரியத்தாமதமும் ஏற்படலாம். எந்த பிரச்சினையையும் முறியடிக்கும் வல்லமை வந்து சேரும். தொழிலில் நற்பெயர் கிடைக்கும். மேலதிகாரிகளின் அனுசரனை கிடைக்கும்.

அரசுக் காரியங்களில் பிரத்யேக கவனிப்பு கிடைக்காமல் போகலாம். ஆனாலும் பதவி உயர்வும் சம்பள உயர்வும் தங்கு தடையின்றி கிடைக்கும். வியாபாரிகள் முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும். வரவு செலவு கணக்கைச் சரியாக வைத்துக் கொள்ளவும். அரசியல்வாதிகள், வாகனங்களைக் கையாளும்போது கவனம் தேவை. கலைஞர்கள், நல்ல புகழும் பெருமையும் கிடைக்கப் பெறுவர். மாணவமணிகள் சிறப்பான பலனைக் காணலாம். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன்

திசைகள்: வடகிழக்கு,  தெற்கு

நிறங்கள்: ஊதா, பச்சை | எண்கள்: 2, 3, 4

பரிகாரம்: புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று வலம் வரவும்.

 

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் உங்களுக்கு எல்லாக் கஷ்டங்களும் நீங்கி நிம்மதி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் விலகும். பொருளாதார வலிமை கூடும்.அதே வேளையில் உடைமைகளில் கவனமும் தேவை. இழப்பு ஏற்படலாம்.  வாழ்க்கையில் பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். அதே வேளையில் தெய்வ அனுகூலத்துடன் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுடன் அதனைச் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும். வீட்டில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் தலைதூக்கலாம்.

பரஸ்பரம் விட்டுக் கொடுத்துச் செல்வதால் நிலைமையைச் சமாளிக்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். உடன் பணிபுரிவோரால் அனுகூலம் உண்டு. உங்கள் பொறுப்புகளை வேறு நபரிடம் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். அலைச்சல் இருக்கும். கலைத் துறையினருக்கு, தீவிர முயற்சிகளின் அடிப்படையில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். திறமைக்கேற்ற புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகள், சமூக சேவகர்கள் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள், அதிக சிரத்தை எடுத்துப் படிப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, திங்கள்

திசைகள்: கிழக்கு,  மேற்கு

நிறங்கள்: மஞ்சள், பச்சை | எண்கள்: 7, 9

பரிகாரம்: திங்கள்கிழமை அன்று அருகிலிருக்கும் ஏதேனும் ஒரு அம்மன் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும்.

 

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் காரிய அனுகூலம் உண்டாகும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். தொழில் நிமித்தமாக இடம்விட்டு இடம்பெயரும் சூழ்நிலை உருவாகும். சரியில்லாத சகவாசத்திலிருந்து தெய்வ அனுகூலத்தால் விடுபட்டு முன்னேற்றம் வந்து சேரும். உறவினர்கள் வகையில் வீண் மனக்கசப்பு வரலாம். வெளியூர்ப் பயணம் ஏற்படும். அதீத உழைப்பின் மூலமே அனைத்து நற்பலன்களையும் பெற முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு தங்கு தடையின்றி கிடைக்கும்.

உடன் பணிபுரிபவர்கள் ஆதரவுடன் இருப்பார்கள். புதிய வியாபாரம் தொடங்குவதற்கு முன் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் ஆலோசனை செய்யவும். அறிவால் ஏற்றம் காணும் வாரம் இது. கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புகழும் பாராட்டும் கிடைக்கும். அரசியல்வாதிகள், எதிர்பார்த்த பதவியை அடையலாம். அலைச்சல் இருக்கும். பெண்கள் உற்சாகமாக காணப்படுவார்கள். கணவர் மற்றும் அண்டை அயலாரின் அன்பும் பாசமும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். பலருக்கு வெற்றி நிச்சயம்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன்

திசைகள்: கிழக்கு, வடகிழக்கு

நிறங்கள்: மஞ்சள், ஆரஞ்சு | எண்கள்: 1, 6, 8

பரிகாரம்: ஞாயிறுற்றுக்கிழமையன்று அருகிலிருக்கும் ஏதேனும் ஒரு சிவன் கோவிலுக்குச் சென்று மூன்று முறை வலம் வரவும்.

 

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் நல்ல பணப்புழக்கமும், பொருளாதார ஏற்றமும் இருக்கும்.  பிள்ளைகளால் அனுகூலம் ஏற்படும். எந்த பிரச்சினையையும் சந்தித்து முறியடிக்கும் வல்லமையைப் பெறலாம். காரியத்தடைகள் நீங்கி அனுகூலம் பிறக்கும். வீண் வாதங்களைத் தவிர்க்கவும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். புதிய வீடு வாங்க வாய்ப்பு உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் அன்பு நீடிக்கும். சிற்சில பிரச்சினைகளும் வரத்தான் செய்யும். பரஸ்பரம் விட்டுக் கொடுத்துப் போகவும். தொழில் நிமித்தமாக குடும்பத்தை விட்டுப் பிரியும் சூழ்நிலை வரும். தூரத்து உறவினரால் நனமை ஏற்படும். சொந்தத் தொழில் புரிவோர் சிறிது சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும்.

உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வருமானத்தில் எந்தக் குறையும் இருக்காது. உடன் பணிபுரிவோரிடம் அனுசரனையாக நடந்து கொள்ளவும். கலைத் துறையினருக்கு, முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு பண விஷயம் திருப்திகரமாக இருக்கும். ஆனால் எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் வாக்குவாதம் ஏற்படலாம். பெண்கள் குடும்ப ஒற்றுமைக்காக விட்டுக் கொடுத்து போக வேண்டியிருக்கும். மாணவர்கள் படிப்பில் தீவிர அக்கறை எடுக்க வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன்

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: மஞ்சள், பச்சை | எண்கள்: 2, 4, 6

பரிகாரம்: புதன்கிழமை அன்று அருகிலிருக்கும் ஐயப்பன் கோவிலுக்குச் சென்று வணங்கி வரவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x