Last Updated : 29 Mar, 2018 11:05 AM

 

Published : 29 Mar 2018 11:05 AM
Last Updated : 29 Mar 2018 11:05 AM

ஆலய அற்புதங்கள்: லிங்கத்தின் பின்னால் நீங்காத நிழல்

தெ

லங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டத்தில் பனகல் கிராமத்தில் உள்ள சாயா சோமேஸ்வரர் ஆலயத்தில் கர்ப்பகிரகத்தில் இருக்கும் லிங்கத்துக்குப் பின்னால் பகல் முழுவதும் தூணொன்றின் நிழல் விழுகிறது. ஆனால், அங்கே தூண் கிடையாது. 12-ம் நூற்றாண்டில் கண்டூர் சோழர்களால் கட்டப்பட்ட ஆலயம் இது. திருகுடாலயம் என்றும் இந்த ஆலயம் அழைக்கப்படுகிறது.

மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியவாறு லிங்கம் வீற்றிருக்கும் கருவறையில், லிங்கத்துக்குப் பின்னால் மாறாத நிழல் இருப்பதற்குக் காரணம் ஒளித்துகள்கள் ஒரு இடத்தில் சிதறுமாறு துல்லியமாக அமைக்கப்பட்டிருப்பதுதான் காரணம் என்கிறார்கள் இயற்பியல் வல்லுநர்கள். சூரியன் எந்தப் புள்ளியில் இருந்தாலும் இந்த நிழல் அசையவே அசையாது.

 Siva100right

அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஒளியைப் பற்றியும் அதன் பண்புகளைப் பற்றியும் துல்லியமாகத் தெரிந்த கட்டிட வல்லுநர்களால்தான் இதுபோன்ற அற்புதம் சாத்தியம் என்று வியக்கப்படும் அதிசயம் இது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x