Published : 23 Sep 2014 10:32 AM
Last Updated : 23 Sep 2014 10:32 AM

ஐஐடி நுழைவுத் தேர்வில் விரைவில் அதிரடி மாற்றம்: மனிதவள மேம்பாட்டுத்துறை செயலர் தகவல்

ஐஐடி நுழைவுத் தேர்வில் புதிய மாற்றங்களை கொண்டுவர உள்ளதாக தேசிய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலர் அசோக் தாக்கூர் சென்னையில் நேற்று கூறினார்.

ஐஐடி-களின் 48-வது கவுன்சில் கூட்டம் சென்னை ஐஐடி வளா கத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி தலைமை வகித் தார். இதில் ஐஐடிகளின் கவுன்சில் உறுப்பினர்கள் பங்கேற்று பல் வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர். முக்கியமாக ஐஐடி நுழைவுத் தேர்வில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்ற கூடுதல் இணை சேர்க்கை குழு வின் ( Joint Admission Board ) பரிந்துரை குறித்தும் பேசப்பட்டது.

இந்த கூட்டத்துக்கு பிறகு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலர் அசோக் தாக்கூர் நிருபர் களிடம் கூறியதாவது:

ஐஐடி நுழைவுத்தேர்வில் தற்போது உள்ள நடைமுறையில் நிறைய மாணவர்கள் பாதிக்கப் படும் சூழல் உள்ளது. இதனால் அதில் சில மாற்றங்களை கொண்டு வரவுள்ளோம். இதுவரை இருந்த முறைப்படி ஒருவர் ஐஐடியில் சேர JEE Advanced தேர்வில் அகில இந்திய அளவில் ரேங்க் எடுக்க வேண்டும். அதுமட்டுமன்றி மாநில பொதுத்தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங் களில் அதிகப்படியான கட்-ஆஃப்களை எடுக்க வேண்டும். அப்படி அதிக கட்-ஆஃப் எடுக் கும் மாணவர்களை 20 சதமான முறைப்படி (20 Percentile System) தேர்வு செய்து குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே ஐஐடியில் படிக்கின்ற வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதனால் மற்ற பாடங்களில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இந்த முறையால் கடந்தாண்டு 234 மாணவர்கள் ஐஐடி-யில் சேர முடியாமல் போனது. இந் நிலையில் இந்த முறையில் புதிய மாற்றத்தை கொண்டு வரவுள்ளோம். இதன்படி JEE Advanced தேர்வில் அகில இந்திய ரேங்க் எடுக்கும் ஒருவர் கணிதம், வேதியியல், இயற்பியல் மட்டுமன்றி மற்ற பாடங்களிலும் அதிக மதிப்பெண் பெற வேண்டும். இதன்படி பொதுத்தேர்வில் ஒட்டு மொத்தமாக எல்லா பாடங்களிலும் 75% எடுக்கும் பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர் களும், 70 % மதிப்பெண் எடுக் கும் பட்டியல் இனத்தவர் மற்றும் பட்டியல் வகுப்பினரும் ஐஐடியில் சேர தகுதியானவர்கள் ஆவார்கள். மேலும் அவர்கள் JEE Advanced தேர்வு ரேங்க் பெற்றிருக்க வேண்டியதும் அவசியம்.

மேலும் இந்தியாவிலுள்ள ஒட்டு மொத்த ஐஐடிகளுக்கும் சேர்த்து பெங்களூரில் ஒரு முன்னாள் மாணவர்கள் மையத்தை அமைக்கவுள்ளோம். இதுமட்டு மன்றி பல்கலைக் கழக தேர்வுகளில் வெற்றிபெறுபவர்களுக்கு இந்தியளவில் ஒரே ரேங்க் முறையையும் அறிமுகப் படுத்தவுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x