Published : 02 May 2019 01:10 PM
Last Updated : 02 May 2019 01:10 PM

வார ராசிபலன் மே 02 முதல் மே 08 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரனின் சஞ்சாரத்தால் புத்திக் கூர்மையுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்காலம் பற்றிய திட்டங்களை வகுப்பார்கள். பணவரவு இருக்கும்.

குடும்பத்தில் வாக்குவாதத்தையும் கோபத்தையும் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்துச் செல்ல வேண்டும். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. தாய்வழி உறவினர்களின் உதவி இருக்கும். விருந்தினர்கள் வந்து செல்வார்கள். பெண்களுக்கு, தடுமாற்றம் இல்லாமல் எதையும் செய்வது நல்லது.

கலைத் துறையினருக்கு, நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சினைகள் குறையும். அரசியல்வாதிகளுக்கு, எதிர்காலம் பற்றிய சிந்தனை உண்டாகும். மாணவர்களுக்கு, சக மாணவர்கள், நண்பர்களிடம் தேவையற்றதைப் பேச வேண்டாம். பாடங்களில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நன்மை தரும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி.

திசைகள்: மேற்கு, வடமேற்கு.

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்.

எண்கள்: 2, 6.

பரிகாரம்: விஷ்ணு துர்க்கையை வழிபட்டு வர, நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரம் அனுகூலம் தரும் வகையில் இருக்கிறது. புத்திக் கூர்மையுடன் எதையும் செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். புதிய வர்த்தக ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் இருக்கும்.

 உத்தியோகத்தில் ஏற்கெனவே திறம்படச் செய்த பணிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் வாக்குவாதங்கள் உண்டாகலாம். வாழ்க்கைத் துணையிடமும் குழந்தைகளிடமும் அனுசரித்துச் செல்ல வேண்டும். குடும்பத்துக்காகக் கூடுதலாக உழைக்க வேண்டியது இருக்கும்.

பெண்களுக்கு, எந்த ஒரு காரியத்துக்கும் கூடுதல் நேரம் உழைக்க வேண்டி இருக்கும். கலைத் துறையினர் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு, மேலிடத்தால் அழுத்தம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் நண்பர்களின் உதவி கிடைக்கும். வீண் செலவைக் குறைப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், புதன். 

திசைகள்: வடக்கு, வடமேற்கு.

நிறங்கள்: சிவப்பு.

எண்கள்: 1, 5, 9.

பரிகாரம்: அபிராமி அந்தாதி படித்து அம்மனை வழிபட எதிர்ப்புகள் அகலும். காரியத் தடை நீங்கும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் குருவின் சஞ்சாரத்தால் திட்டமிட்டுச் செய்யும் பயணங்கள் வெற்றிபெறும். தொழில் வியாபாரத்தில் வாக்கு வன்மையால் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவார்கள். உத்தியோகஸ்தர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வேலைக்கு முயல்பவர்களுக்கு வேலை கிடைக்கலாம்.

வாங்க நினைத்த ஆடை, ஆபரணங்களை வாங்கலாம். குடும்பத்தினருடன் விருந்து நிகழ்ச்சிகளுக்குச் சென்று வருவீர்கள். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பெண்களுக்கு, புத்திக் கூர்மையுடன் செயல்பட்டுக் காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள்.

கலைத் துறையினருக்கு, புதிய வாய்ப்புகள் கிட்டும். அரசியல்வாதிகள் எதையும் புத்திசாதுரியத்தைப் பயன்படுத்திச் சமாளிப்பீர்கள். மாணவர்களுக்கு, பாடங்கள் படிப்பதில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர்களின் ஆதரவுடன் படித்துத் தேர்வில் வெற்றி பெறுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி.

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்.

எண்கள்: 3, 6.

பரிகாரம்: சித்தர்களுடைய ஜீவ சமாதிக்குச் சென்று வணங்க மனஅமைதியைத் தரும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் எடுத்த காரியமனைத்தும் வெற்றியடைவதுடன் லாபகரமாகவும் இருக்கும். பணவரவு அதிகரிக்கும். வீடு, வாகனங்கள் வாங்கும் நிலை உருவாகும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.

வியாபாரம், தொழிலை விரிவுபடுத்துவது பற்றிய திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் நிலுவைப் பணம் கைக்குக் கிடைக்கும். குடும்பத்தினரால் கூடுதல் வருமானம் கிடைக்கும். முக்கியஸ்தர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். கணவன் மனைவிக்குள் சுமுகமான நிலை காணப்படும்.

பெண்களுக்கு, மற்றவர்கள் உதவியுடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன்களைத் தரும். கலைத் துறையினர் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு, புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாணவர்களுக்கு, சக மாணவர்களுடன் பழகும்போது கவனம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி.

திசைகள்: தெற்கு, வடமேற்கு.

நிறங்கள்: வெளிர் நீலம், மஞ்சள்.

எண்கள்: 2, 6.

பரிகாரம்: சனி பகவானைத் தீபமேற்றி வணங்கி வழிபட ஆரோக்கியம் மேம்படும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் அனைத்துக் கிரகங்களும் அனுகூலம் தரும் வகையில் உள்ளது. பயணங்களின்போது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் ஆலோசனை செய்து வியாபாரத்தை மேற்கொள்வது கூடுதல் லாபம் கிடைக்க வழி வகுக்கும். உத்தியோகத்தில் சக பணியாளர்களுடன் ஆலோசனை செய்து முடிவுகளை எடுக்க வேண்டும்.

குடும்பத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவி இருவரும் பேசி முடிவெடுத்து செய்வது பலன்தரும். பெண்களுக்கு, மனக்குழப்பங்கள் நீங்கித் தெளிவு உண்டாகும். கலைத் துறையினருக்கு, பணவரவு திருப்தி தரும்.

அரசியல்வாதிகள் புதிய வேலைகளைத் தொடங்க முடியும். மாணவர்களுக்கு, எதையும் அவசரமாகச் செய்யாமல் யோசித்துச் செயல்படுவது நல்லது. விளையாட்டுப் போட்டிகளுக்காக வெளியூர் செல்வீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி.

திசைகள்: மேற்கு, வடமேற்கு.

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்.

எண்கள்: 3, 6.

பரிகாரம்: மாரியம்மனைத் தீபம் ஏற்றி வழிபட, எல்லாத் துன்பங்களும் நீங்கும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியிலேயே சுக்கிரன் இருப்பதால் எதையும் ஆராய்ந்து பார்த்த பிறகே முற்படுவீர்கள். தொழில், வியாபாரம் வேகம் பிடிக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். குடும்பத்தில் ஏதாவது ஒரு விஷயம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்படும்.

கணவன் மனைவிக்குள் அனுசரித்துச் செல்ல வேண்டும். நண்பர்கள், உறவினர்களுடன் மனஸ்தாபம் உண்டாகலாம். பெண்களுக்கு, எந்த ஒரு செயலைச் செய்யும் முன்பும் நல்லது கெட்டதை ஆராய்ந்து பின்னர் அதில் ஈடுபடுவது நல்லது.

கலைத் துறையினருக்கு, தேவையான உதவிகள் கிடைப்பது தாமதப்படும். அரசியல்வாதிகளுக்கு, வீண் அலைச்சல் உண்டாகலாம். மாணவர்களுக்கு, கவனத் தடுமாற்றம் இல்லாமல் பாடங்களைப் படிப்பது நன்மை தரும். சக மாணவர்களிடம் எச்சரிக்கையாகப் பழக வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்.

திசைகள்: வடக்கு, தென்மேற்கு.

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்.

எண்கள்: 3, 9.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமையில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது வெற்றிக்கு உதவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x