Published : 26 May 2019 08:41 AM
Last Updated : 26 May 2019 08:41 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். புதிய முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும். ஆன்மிக காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

ரிஷபம்: வெளி வட்டாரத்தில் மகிழ்ச்சி பெருகும். பிரபலங்களின் உதவி கிடைக்கும். அவர்களது உதவியுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். பேச்சில் நிதானம் தேவை.

மிதுனம்: வீட்டை விரிவுபடுத்துவது, அழகுபடுத்துவது நல்லபடியாக முடியும். சிலருக்கு அரசு பதவிகள், பொறுப்புகள் தேடிவரும். இழந்த பணம், சொத்துகளை பெறுவீர்கள்.

அந்தஸ்து உயரும். கடகம்: ஆன்மிகப் பயணம் சென்று வருவீர்கள். தியானம், யோகா வில் ஈடுபாடு அதிகரிக்கும். உங்களிடம் இருக்கும் அலட்சியப் போக்கால் சில சிக்கல்கள் வந்து நீங்கும்.

சிம்மம்: தடைபட்ட வேலைகள் நடந்து முடியும். அதிகாரிகளின் உதவி கிடைக்கும். நல்ல இடவசதியுடன் கூடிய புதிய வீட்டுக்கு குடிபுகுவீர்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும்.

கன்னி: மறைமுக எதிரிகளைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். புதிய நபர்கள் உதவுவார்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருக்கும் வெளிநாட்டுப் பயணம் சாதகமாக அமையும்.

துலாம்: நம்பிக்கை, உற்சாகம் பிறக்கும். மறைமுக எதிர்ப்புகளை வெல்வீர்கள். விஐபிக்களின் நட்பும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். சொந்த ஊரில் மதிப்பு, மரியாதை கூடும்.

விருச்சிகம்: வீண் அச்சம், கவலைகள் நீங்கி, நேர்மறை எண்ணங் கள் பிறக்கும். நீண்டகாலத்துக்கு பிறகு, நிம்மதியாக தூங்குவீர்கள். பெற்றோர் உடல்நலத்தில் கவனம் தேவை.

தனுசு: சகோதர உறவுகளால் ஆதாயம், அனுகூலம் பெறுவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதியவர் அறிமுகத்தால் நன்மை பிறக்கும். வாகனம் வாங்குவீர்கள்.

மகரம்: புதிய முயற்சிகள், திட்டங்களில் ஈடுபாடு உண்டாகும். வராது என்று நினைத்த பணம் வந்துசேரும். பழைய கடன்களை தீர்ப்பீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக்கூடாது.

கும்பம்: அசதி, மனச்சோர்வு, பதற்றம் வந்துபோகும். உடன்பிறந்தவர்கள் இடையே மனக்கசப்புகள் வந்து நீங்கும். யாருடனும் வீண் விவாதங்கள் வேண்டாம். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

மீனம்: சிலர் உங்கள் மீது வீண் பழி சுமத்துவார்கள். கோயில் திருவிழாக்களை முன்னின்று நடத்தி, பாராட்டு பெறுவீர்கள். பிரபலங்களின் அறிமுகத்தால் ஆதாயம் கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x