Published : 06 May 2019 09:05 AM
Last Updated : 06 May 2019 09:05 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: தேவையற்ற மன உளைச்சல்கள் நீங்கி, நம்பிக்கையும், உற்சாகமும் பிறக்கும். வீட்டில் கலகலப்பு திரும்பும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.

ரிஷபம்: யாருடனும் வீண் பேச்சுகள் வேண்டாம். குடும்பத்தினர் யாரும் உங்களை புரிந்துகொள்வது இல்லை என்று ஆதங்கப்படுவீர்கள். சிறுசிறு ஏமாற்றம் ஏற்படக்கூடும்.

மிதுனம்: மறதி, சோம்பல் வந்து நீங்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் ஏற்படும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

கடகம்: குடும்பத்தினரின் எண்ணங்களை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். தாய் உடல்நிலை சீராகும். அக்கம் பக்கத்தினர் ஆதரவு பெருகும். எக்காரியத்திலும் நிதானம் அவசியம்.

சிம்மம்: பிள்ளைகளால் மதிப்பு, அந்தஸ்து உயரும். பழுதான வீடு, வாகனத்தை சரிசெய்வீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். பணவரவு உண்டு.

கன்னி: கணவன் - மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். செலவுகளை கட்டுப்படுத்தி, சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிகம், யோகாவில் நாட்டம் கூடும்.

துலாம்: உறவினர்கள், நண்பர்களிடம் உரிமையுடன் பேசுவதாக நினைத்து, பெயரை கெடுத்துக்கொள்ள வேண்டாம். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது.

விருச்சிகம்: மறைந்துகிடக்கும் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் தேடிவரும். சகோதர வகையில் ஆதரவு பெருகும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும்.

தனுசு: உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்துபேசி முக்கிய முடிவு எடுப்பார்கள். பிரபலங்களின் அறிமுகத்தால் ஆதாயம் கிடைக்கும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு கூடும்.

மகரம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித் திறமைகளைக் கண்டறிந்து உற்சாகப்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.

கும்பம்: பால்ய நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல், செலவுகள் ஏற்படும். புது வேலை அமையும். பழைய சிக்கலில் ஒன்று தீரும்.

மீனம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் மரியாதை, அந்தஸ்து உயரும். இழுபறியாக இருந்த பூர்வீக சொத்து பிரச்சினை தீரும். புது வாகனம் வாங்குவீர்கள்.
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x