ஆன்மிக நூலகம்: ஔவையார் செய்த பூஜை

ஆன்மிக நூலகம்: ஔவையார் செய்த பூஜை
Updated on
1 min read

சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவஞ்சைக்களத்தின் கடற்கரையில் நின்றிருக்கும்பொழுது, தான் மறுபடியும் கயிலைக்குத் திரும்பும் நேரம் வந்துவிட்டது என்று உணர்ந்து சிவபெருமானைத் துதித்துக் கடைசியாக ஒரு தேவாரப் பதிகம் பாடுகிறார். உடனே கயிலையிலிருந்து வெள்ளை யானை வந்து கயிலைக்கு அவரைக் கூட்டிச் செல்கிறது.

அரண்மனையிலிருந்து வெளிவந்த அவருடைய நண்பர் சேரமான் பெருமாள், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகாயத்தில் போவதைக் கண்டு தனது ராஜகுதிரையின் செவியில் பஞ்சாட்சரத்தை ஓதியவுடன், மந்திர மகிமையால் அந்தப் புரவியும் ஆகாயத்தில் பாய்ந்து சுந்தரரின் யானையை வலம் வந்து முன்னே செல்கிறது.

அன்னை ஔவையும் கணபதி பூஜை செய்யும்போது இந்த அற்புத நிகழ்ச்சியை உணர்ந்து, தானும் கயிலைக்குப் போக வேண்டும் என்ற அவாவினால், அவசரம் அவசரமாக பூஜை செய்கிறார். உடனே விநாயகர் அசரீரி வாக்காய், ‘நீ நிதானமாகப் பூஜை செய். நான் உன்னை அங்கே சேர்த்து விடுவேன்’ என்று கூறியவுடன் பூஜையை முடித்த பிறகு ஔவையார் விநாயகர் அகவலைப் பாடுகிறார்.

கடைசி வரியில் “வித்தக விநாயக விரைகழல் சரணே” என்று முடித்தவுடன், கணபதி தன் தும்பிக்கையால் ஔவையைத் தூக்கிக் கொண்டு கயிலைவாயிலில் நிறுத்திவிடுகிறார். சிறிதுநேரம் கழித்து அங்கு வந்த சேரமான் வியப்புற்று, பாட்டியே! எங்களுக்கு முன்பு நீ எப்படி இங்கு வந்தாய்? என்று கேட்டவுடன் கீழ்க்கண்ட பாடலை ஔவையார் பாடுகிறார்.

தனக்கு மேலான தலைவன் வேறு யாரும் இல்லாததால் கணபதி விநாயகர் எனப்படுவார். அவரைத் துதித்து அகவல் பாட்டில் இயற்றப்பட்ட நூல் விநாயகர் அகவல்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in