Published : 26 Apr 2019 09:10 AM
Last Updated : 26 Apr 2019 09:10 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: கடின உழைப்பால் காரியங்களைச் சாதிப்பீர்கள். மனப்போராட்டங்கள் ஓயும். சமயோசிதமான பேச்சால் தடைபட்ட வேலைகளை வெற்றிகரமாக முடித்து காட்டுவீர்கள்.

ரிஷபம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். எதிர்ப்புகள், தடைகள் விலகும். முகப்பொலிவு, ஆரோக்கியம் கூடி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும்.

மிதுனம்: செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். பணப் பற்றாக்குறையை கடன் வாங்கியாவது சமாளிப்பீர்கள். மனைவிவழி உறவினர் ஆதரவு உண்டு.

கடகம்: வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.  பழைய நகைகளை விற்று புது டிசைனில் ஆபரணங்கள் வாங்குவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் வீடுதேடி வருவார்கள்.

சிம்மம்: ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். சேமிக்கும் அளவுக்கு வருவாய் அதிகரிக்கும். பழுதான மின்சாதனங்களை மாற்றுவீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்.

கன்னி: வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். பெரிய பதவிக்கு ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தாயாரின் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். பணவரவு உண்டு.

துலாம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். கனிவான பேச்சால் காரியங்களைச் சாதிப்பீர்கள். கணவன் - மனைவி இடையே ஒற்றுமை நிலவும்.

விருச்சிகம்: புதியவர்கள் அறிமுகவார்கள். வரவேண்டிய பணமெல்லாம் கைக்கு வரும். வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள்.

தனுசு: குடும்பத்தில் அமைதி பிறக்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். அனுபவப்பூர்வமாகவும், எதார்த்தமாகவும் பேசுவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

மகரம்: வேலைச்சுமையால் சோர்வாகக் காணப்படுவீர்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். உடல்நிலை அவ்வப்போது லேசாக பாதிக்கும். திடீர் பயணம் உண்டு.

கும்பம்: வீண் அலைச்சலும் திடீர் பயணங்களும், அத்தியாவசியச் செலவுகளும் அதிகரிக்கும். பழைய பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது. வாகனம் செலவு வைக்கும்.

மீனம்: வருமானம் திடீரென உயரும். எதிர்காலத் திட்டங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.. கவுரவப் பொறுப்புகள் தேடி வரும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x