Published : 11 Apr 2019 09:47 am

Updated : 11 Apr 2019 09:49 am

 

Published : 11 Apr 2019 09:47 AM
Last Updated : 11 Apr 2019 09:49 AM

வார ராசிபலன் ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 16 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

11-16

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் வாக்குவன்மையால் எதையும் சிறப்பாகச் செய்துமுடிப்பீர்கள். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள்விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். வார இறுதியில் நீண்டகால பிரச்சினைகளுக்கு முடிவு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியும்சந்தோஷமும் அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. தங்க நகைகள் சேரும் காலகட்டம்இது. தொழில், வியாபாரம் உன்னத நிலையை அடையும்.

புதிய தொழில்துவங்குவதற்கு உண்டான ஆயத்தப் பணிகள் நடைபெறும்.பணத்தட்டுப்பாடு வராது. புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம்.பெண்கள் புதிய ஆடை, அணிகலன்களை வாங்குவீர்கள். புதிதாக வீடு,வாங்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். மாணவர்களுக்குபொழுதுபோக்கு விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும்.

அதிர்ஷடக் கிழமைகள்: செவ்வாய், புதன்

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: பச்சை, கரும்பச்சை

எண்கள்: 3, 9

பரிகாரம்: நந்தீஸ்வரரை நெய்தீபம் ஏற்றி வணங்க கடன் சுமை குறையும்.

 

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் மனநிம்மதி உண்டாகும். உதவி கேட்டு வருபவர்களுக்குதயங்காமல் உதவிகளைச் செய்வீர்கள். நல்ல உறக்கம் இருக்கும். ஆடை,ஆபரணம் வாங்குவதால் செலவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிஇருக்கும். கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை நீங்கி நெருக்கம்அதிகரிக்கும். பிள்ளைகளுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொடுப்பீர்கள். தொழில், வியாபாரப் பங்குதாரர்களுடன் மனவருத்தங்கள் ஏற்பட்டு மறையும்.

மனம்விட்டுப் பேசுவது தொழிலில் எந்தத் தடங்கலும் ஏற்படாமல் காக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குகடுமையான வேலை இருக்கும். உத்தியோகம் காரணமாக வெளியில்தங்க நேரிடும். பெண்களுக்கு, பிரச்சினைகளைச் சமாளிக்கும் துணிச்சல் ஏற்படும். தன்னம்பிக்கை அதிகமாகும். மாணவர்களுக்கு பாடங்களைக்கவனமாகப் படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவதற்கான முயற்சிகளைமேற்கொள்வீர்கள்.

அதிர்ஷடக் கிழமைகள்: வெள்ளி, சனி

திசைகள்: தெற்கு, வடமேற்கு

நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு

எண்கள்: 5, 7

பரிகாரம்: நவக்கிரகத்தில்சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து அர்ச்சனை செய்யஎதிர்பார்த்த பணவரத்து இருக்கும். மனமகிழ்ச்சி ஏற்படும்.

 

மிதுன ராசி வாசகர்களே

இந்தவாரம் மனோதைரியம் அதிகரிக்கும். நண்பர்கள் ஆதரவுகிடைக்கும். வீண் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். வழக்கு,விவகாரங்களைத் தள்ளி போட வேண்டும். குடும்பத்தில் அனைவரும்உங்களை ஆதரித்து ஆச்சரியத்தில் ஆழ்த்துவார்கள். சொத்துவிவகாரங்களில் பத்திரங்களைப் படித்துப் பார்த்துக் கையெழுத்துபோடுவது சிறந்தது. கணவன் மனைவிக்குள் பரஸ்பரம் விட்டுக்கொடுத்துப் போவீர்கள். தொழில், வியாபாரத்தில் தொய்வு நிலைசரியாகி நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.

புதிய வர்த்தக ஆர்டர்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவிகள் தாமதமாகக் கிடைக்கும். புதியவேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு பலன் உண்டு. பெண்களுக்குஅலைச்சல் அதிகரிக்கும். உடன் பிறந்தோரைச் சந்திக்கக் கூடியவாய்ப்புகள் உருவாகும். எதிர்பாலினத்தினவரிடம் கவனமாக பழகவும்.மாணவர்களுக்கு, பாடங்களை படிப்பதில் திருப்தி உண்டாகும். கல்விதொடர்பான பயணங்கள் செல்ல நேரிடலாம்.

அதிர்ஷடக் கிழமைகள்: புதன், சனி

திசைகள்: மேற்கு, வடகிழக்கு

நிறங்கள்: பச்சை, ஊதா

எண்கள்: 1, 4

பரிகாரம்: அபிராமி அந்தாதி துதிபாடி அம்மனை வணங்கி வர குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

 

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் வீண் அலைச்சல் உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும்.புதிய காரியங்களில் ஈடுபடும் போது யோசித்துச் செய்வது நல்லது. நண்பர்களிடம் கவனமாகப் பேச வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக்குறைவு இருக்காது. சகோதரர், சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் கஷ்டம்,சுகம் இரண்டும் இருக்கும். தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டு.

எல்லாரும் நட்புடன் பழகுவார்கள். தொழில், வியாபாரத்தில் முடிவுகளைஎடுக்கமுடியாமல் திணறலாம். சக தொழிலாளர்களுக்கு ஏற்பட்டநெருக்கடியைத் தீர்த்து வைப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய பதவிக்குஉங்கள் பெயர் பரிந்துரைக்கப்படலாம். கண்ணும் கருத்துமாகவேலைகளைச் செய்யுங்கள். பெண்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும்.திருமணம் கைகூடி வரலாம். மாணவர்கள் கவனத்தைச் சிதறவிடாமல்படிப்பது அவசியம். விளையாடும் போதும் கவனம் தேவை.

அதிர்ஷடக் கிழமைகள்: திங்கள், செவ்வாய்

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: பிரவுன், மஞ்சள்

எண்கள்: 1, 2

பரிகாரம்: நவக்கிரகத்தில் சுக்கிர பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வணங்க உடல்ஆரோக்கியம் மேம்படும்.

 

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் உடல் ஆரோக்கியம் பெறும். மனதைரியமும், உற்சாகமும்கூடும். வாரத் தொடக்கத்தில் சாதகமான பலன்கள் இருக்கும். விருந்துநிகழ்ச்சிகளில் கலந்து மகிழ்வீர்கள். வார இறுதியில் நண்பர்களால்உதவிகள் கிடைக்கும். வெளி வட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை நீங்கும்.குடும்பத்தினருக்காகப் பொருட்களை வாங்குவீர்கள்.

குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். முன்னேற்றத்துக்கான செய்திகள் வரும். தொழில்,வியாபாரம் சிக்கலின்றி நடைபெறும். பண வரவும் திருப்தியாகவும்,தங்குதடையின்றியும் வந்து சேரும். உத்தியோகத்தில் புதிய பதவிகள்,பொறுப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு, மனக்கவலை தீர்ந்து நிம்மதிப்பெருமூச்சு விடுவீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகலாம்.மாணவர்கள் கவனத்தைச் சிதறவிடாமல் பாடங்களைப் படிப்பது நல்லது.

அதிர்ஷடக் கிழமைகள்: ஞாயிறு, திங்கள்

திசைகள்: வடக்கு, மேற்கு

நிறங்கள்: சிவப்பு, கருஞ்சிவப்பு

எண்கள்: 4, 7

பரிகாரம்: ஏழைகளுக்குஅன்னதானம் வழங்கி அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்துமனநிம்மதியை அடையுங்கள்.

 

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனத்தில் தன்னம்பிக்கைகூடும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த நன்மையைத்தராவிட்டாலும் உங்களது எண்ணப்படியே எதையும் செய்து முடிக்கும்சூழ்நிலை ஏற்படும். மற்றவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதில் நாட்டம் செல்லும். கவுரவம், அந்தஸ்து உயரும். வீண்செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன்மனைவிக்குள் பிரச்சினைகள் தீரும். பிள்ளைகள் விரும்பும்பொருள்களை வாங்கிக் கொடுப்பீர்கள்.

வீடு, வாகனம் வாங்குவது,புதுப்பிப்பில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரச் சூழல் திருப்தியைத்தரலாம். அதற்காக இடைவிடாது உழைப்பீர்கள். சரக்குகளைஅனுப்புவதில் இருந்த பிரச்சினைகள் அகலும். முக்கியப் பொறுப்புகளில்இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. பெண்கள் உற்சாகமாகசெயல்பட்டு காரியத்தை நடத்துவார்கள். தீவிரமான முயற்சிகள் செய்துவெற்றி காண்பீர்கள். மாணவர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கிநம்பிக்கையுடன் பாடங்களைப் படிப்பது வெற்றிக்கு உதவும்.

அதிர்ஷடக் கிழமைகள்: திங்கள், புதன்

திசைகள்: கிழக்கு, வடமேற்கு

நிறங்கள்: பச்சை, இளம்பச்சை

எண்கள்: 4, 7, 8

பரிகாரம்: சிவபுராணம்வாசித்து வழிபட நன்மைகள் உண்டாகும்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

    ராசிபலன்இந்து ராசிபலன்வார ராசிபலன்ராசி பலன்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்ஜோதிடம்Weekly horoscopeTamil horoscopeHindu horoscopeHindu tamil horoscopeTamil rasipalan

    Sign up to receive our newsletter in your inbox every day!

    You May Like

    More From This Category

    More From this Author