பூராட நட்சத்திரம்: விகாரி வருட பலன்கள்

பூராட நட்சத்திரம்: விகாரி வருட பலன்கள்
Updated on
1 min read

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

சமயோசிதம் போல் செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்யக் கூடிய பூராடம் நட்சத்திர அன்பர்களே.

இந்த வருடம் எதிர்பார்த்த பணவரவு தாமதப்படலாம். வீண் பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டி இருக்கும். எனவே கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். எந்த காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது.

தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சலும், பண விரயமும் இருக்கும்.  புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகப் பணிகளை கூடுதல் கவனமுடன்  செய்வது நல்லது.

குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான சூழ்நிலை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில்  அக்கறை காண்பீர்கள். உடல் களைப்பும், சோர்வும் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. 

பெண்கள் எந்தக் காரியத்தில் ஈடுபடும் போதும் யோசித்து செயல்படுவது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். செலவு கூடும்.

கலைத்துறையினர் கடுமையாக உழைப்பின் மூலம் முன்னேற வேண்டி இருக்கும். நண்பர்களின் உதவியால் நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது.

அரசியல்வாதிகள் வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். மேலிடத்திலிருந்து முக்கிய பொறுப்புகள் உங்கள் கையில் வரும். சந்தோஷமான செய்தி வந்து சேரும்.

மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். பாடங்களைக் கவனமாக படிப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.

பரிகாரம்: லக்ஷ்மி நரசிம்மரை வணங்கினால் எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

மதிப்பெண்கள்: 58% நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்

+ மனதில் நிம்மதி பிறக்கும்

- வீண் பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டி இருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in