இன்று ஸ்ரீராமஜெயம் எழுதுங்கள்; மனமும் குணமும் வளமாகும்!

இன்று ஸ்ரீராமஜெயம் எழுதுங்கள்;
மனமும் குணமும் வளமாகும்!
Updated on
1 min read

ஸ்ரீராம நவமி நன்னாள் இன்று (13.4.19). இந்தப் புனிதநாளில், ஸ்ரீராமஜெயம் எழுதி, ராமபிரானைப் பிரார்த்தனை செய்தால், மனமும் குணமாகும் வளமாகும். குடும்பத்தின் குழப்பங்கள் யாவும் தீரும் என்பது ஐதீகம்!

ராமாயண நாயகன் ஸ்ரீராமபிரான் அவதரித்த நன்னாள் இன்று. இந்தநாளில், அருகில் உள்ள ராமர் கோயிலுக்குச் சென்று வழிபடுவது பலவித நன்மைகளைத் தந்தருளும்.

இன்றைய நாளில், மன்னார்குடி அருகில் உள்ள வடுவூர் ராமர் கோயில், தஞ்சாவூர் புன்னைநல்லூர் கோதண்டராமர் கோயில் முதலான பல ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

வீட்டில் விளக்கேற்றி, ராமருக்கு பால்பாயசம், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து ராம்நாமம் சொல்லி வேண்டிக்கொண்டாலும் சுபிட்சம் நிலவும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

மேலும் ஸ்ரீராமநவமி நாளில், ஸ்ரீராமஜெயம் எழுதுவது ரொம்பவே மகத்துவம் வாய்ந்தது. இந்தநாளில், குளித்துவிட்டு, பூஜையறையில் சுவாமி படத்துக்கு எதிரே அமர்ந்துகொள்ளுங்கள். மனம் ஒருமித்த நிலையில், ஸ்ரீராமஜெயம் எழுதுங்கள். 108 முறை அல்லது 1008 முறை என உங்களால் முடிந்த அளவு ஸ்ரீராமஜெயம் எழுதுங்கள். இதனால் உங்கள் மனமும் குணமும் செம்மையாகும். வீட்டின் தரித்திரம் விலகும். குடும்பத்தில் குழப்பங்கள் விலகும். தம்பதி இடையே ஒற்றுமை மேலோங்கும் என்பது உறுதி.

குழந்தைகளை, ஸ்ரீராமஜெயம் எழுதச் சொல்லுங்கள். அவர்கள் எழுதி, ஸ்ரீராமரை வணங்கினால், கல்வியில் ஞானமும் புத்தியில் தெளிவும் கிடைப்பது நிச்சயம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in