அவிட்ட நட்சத்திரம்: விகாரி வருட பலன்கள்

அவிட்ட நட்சத்திரம்: விகாரி வருட பலன்கள்

Published on

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கடின உழைப்பும் மனோ தைரியமும் உடைய அவிட்டம் நட்சத்திர அன்பர்களே.

இந்த வருடம் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடக்கலாம். உடல் ஆரோக்கியம்  ஏற்படும். எதிர் பாலினத்தாரால் லாபம் கிடைக்கக் கூடும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய நேரிடும். பணவரவு கூடும். வீண் அலைச்சல் திடீர் கோபம் உண்டாகலாம். காரிய வெற்றி தரும். மதிப்பும், அந்தஸ்தும் உயரும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு கடன் பிரச்சினைகள் தீரும். போட்டிகள் குறையும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்தவை நல்லபடியாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சில விஷயங்களை தவறாகப் புரிந்து கொண்டு சங்கடப்பட வேண்டி இருக்கும். வாக்குவன்மையால் நன்மை ஏற்படும்.

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த இடைவெளி குறையும். மறைமுக எதிர்ப்புகள்  நீங்கும். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும்.

பெண்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதால் வீண் அலைச்சல் உண்டாகலாம். காரிய வெற்றி, பணவரவு எதிர்பார்த்த படி இருக்கும்.

கலைத்துறையினருக்கு  உடனிருப்பவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். வாக்குவாதங்களைத் தவிர்த்து சாதுர்யமாகக் கையாள்வது நல்லது. வரவேண்டிய பணம் வந்து சேரும்.

அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாட்களாக வரவேண்டி இருந்த பணம் வந்து சேரும். உங்கள் பணிகளில் பல குறுக்கீடுகள் வந்தாலும் அதை சாமர்த்தியமாக சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

மாணவர்கள் சாமர்த்தியமான செயல்களால் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள்.  பாடங்களில் கவனம் செலுத்துவது  அதிகரிக்கும்.

பரிகாரம்: நந்தீஸ்வர பெருமானை வழிபட, மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

மதிப்பெண்கள்: 59% நல்ல பலன்கள் கிடைக்கும்

+ பூமி யோகம் அமையும்

- வீண் அலைச்சல் உண்டாகலாம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in