

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
எதையும் ஒருமுறை பார்த்தாலே அதை பற்றி கிரகித்துக் கொள்ளும் திறமை உடைய திருவாதிரை நட்சத்திர அன்பர்களே. நீங்கள் உழைத்து உயர வேண்டும் என விரும்புபவர்கள்.
இந்த வருடம், நெருக்கடியான பிரச்சினைகள் நீங்கும். பணவரவு அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். பயணங்களும் அவற்றால் நன்மைகளும் உண்டாகும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற பாடுபடுவீர்கள். மற்றவர்கள் மேல் இரக்கம் ஏற்படும். நீண்டநாட்களாக இருந்த பிரச்சினைகள் தீரும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும்.
தொழில் வியாபாரம் முன்னேற்றமாக நடக்கும். லாபம் அதிகரிக்கும். பல வழிகளிலும் பண வரவு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு குறைவால் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். எதிர்பார்த்த பணி இடமாற்றம் கிடைக்கும்.
குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை சேரும். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். சுபச் செலவுகள் அதிகரிக்கும்.
பெண்கள் திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடித்து மன நிம்மதி அடைவீர்கள். பணவரவு அதிகரிக்கும். மற்றவர்கள் மேல் இரக்கம் உண்டாகும்.
அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கட்சி மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழுந்து, உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். அரசு அதிகாரிகளும் உங்கள் நேர்மையான ஆலோசனைகளை மதித்து நடப்பார்கள். அவர்களால் உங்களின் செல்வாக்கு தொண்டர்களிடம் உயர்ந்து காணப்படும்.
கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பாராட்டும், பணமும் உங்கள் உள்ளத்தை உற்சாகப்படுத்தும். சக கலைஞர்கள் நட்புடன் பழகுவார்கள். அவர்களால் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ரசிகர் மன்றங்களுக்குச் செலவு செய்து மகிழ்வீர்கள்.
மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண திட்டமிட்டு படித்து வெற்றி பெறுவீர்கள். மனதில் மகிழ்ச்சிக்கு உரிய சம்பவங்கள் நிகழும்.
பரிகாரம்: நடராஜருக்கு அபிஷேகத்திற்கு பால் வாங்கிக் கொடுத்து வணங்கி வர சகல தோஷங்களும் நீங்கும்.
மதிப்பெண்கள்: 73% நல்ல பலன்கள் கிடைக்கும்
+ சுணக்கமான காரியங்கள் வேகம் பெறும்
- செலவு அதிகரிக்கும்.