

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
எளிதில் கோபம் அடையாமல், பழகுவதற்கு இனிமையான குணம் கொண்ட விசாக நட்சத்திர அன்பர்களே.
இந்த வருடம் தடைகள் அனைத்தும் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரவு எதிர்பார்த்தது போல் இருக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கலாம். பாதியில் நின்ற காரியங்களைத் தொடர்ந்து செய்து முடிப்பீர்கள். திடீர் குழப்பம் ஏற்படலாம். தீ, எந்திரம் ஆகியவற்றைக் கையாளும்போது கவனம் தேவை.
தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். சரக்குகளை அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயலாற்றுவது நல்லது.
குடும்பத்தில் சிறுசிறு சண்டைகள் உண்டாகலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நன்மை தரும்.
பெண்களுக்கு மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சமையல் செய்யும் போதும், மின் சாதனங்களை இயக்கும் போதும் கவனம் தேவை.
கலைத்துறையினர் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது உங்களுக்கு எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் பிரச்சினைகளைத் தவிர்க்க வழிவகை செய்யும்.
அரசியல்வாதிகள் கவனமுடன் செயல்பட்டால் மேலிடத்தின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். உங்களிடம் உதவி கேட்டு வருபவர்களை உதாசீனப்படுத்தாதீர்கள்.
மாணவர்களுக்கு கல்வி பற்றிய மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். பெற்றோர், ஆசிரியர் ஆலோசனை கைகொடுக்கும்.
பரிகாரம்: மஹாலக்ஷ்மியை வணங்க துன்பங்கள் தீரும். மனக்கவலை அகலும்.
மதிப்பெண்கள்: 72% நல்ல பலன்கள் கிடைக்கும்
+ மனதில் இருக்கும் இறுக்கம் அகலும்
- திடீர் குழப்பம் ஏற்படலாம்.