

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
துடிப்புடன் வேகமாகச் செயலாற்றும் கேட்டை நட்சத்திர அன்பர்களே. நீங்கள் ஆடம்பர வாழ்க்கையில் நாட்டமுடையவர்.
இந்த வருடம் பணவரவு அதிகரிக்கும். மனக் குழப்பம் உண்டாகலாம். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்துச் செயல்படுவது நல்லது. காரியத் தடைகள் விலகும். பயணங்கள் மூலம் நன்மை உண்டாகும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்லதாக இருக்கும்.
தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நிலை மாறி முன்னேற்றம் உண்டாகும். லாபம் அதிகரிக்கும். திறமையான பணியாளர்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு சாதகமான பலன் காண்பார்கள்.
குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். உங்களது கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்கள் இருக்காது. கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளின் செயல்பாடுகள் மனதில் திருப்தியைத் தரும். வேடிக்கை வினோதங்களைக் கண்டு களிக்கும் சூழ்நிலை ஏற்படலாம்.
பெண்களுக்கு தொலைதூரத் தகவல்கள் மன மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கும். பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும்.
கலைத்துறையினருக்கு சோதனைகள் மிகுந்த காலமாக இருக்கும். வாய்ப்புகள் இருந்தாலும் உடல்நலம் ஒத்துழைக்காமல் போகலாம். சிறு பிரச்சினையாக இருந்தாலும் கவனமுடன் இருப்பது நல்லது.
அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றத்தில் தடைகள் இருக்கும். பொறுமையாகக் கையாள்வதன் மூலம் பெரிய பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். மிகவும் பொறுமையாக செயல்பட வேண்டிய காலகட்டம் இது.
மாணவர்களுக்கு: கல்வி தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். திறமை வெளிப்படும்.
பரிகாரம்: வீரபத்திர ஸ்வாமியை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். குறைகள் நீங்கும்.
மதிப்பெண்கள்: 78% நல்ல பலன்கள் கிடைக்கும்
+ கல்வி வேலை தொழிலில் சாதனை
- மனக் குழப்பம் உண்டாகலாம்.