வார ராசிபலன் 18-09-2014 முதல் 24-09-2014 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

வார ராசிபலன் 18-09-2014 முதல் 24-09-2014 வரை (மேஷம் முதல் கன்னி வரை)
Updated on
3 min read

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன், 6-ல் சூரியன், புதன், ராகு ஆகியோர் சஞ்சரிப்பது சிறப்பு. முன்னேற்றத்துக்கான தகவல் ஒன்று வந்து சேரும். நண்பர்களும் உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். புதிய சொத்துக்களும் பொருட்களும் சேரும். மன மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். அரசியல்வாதிகள், அரசுப் பணியாளர்கள், நவீன விஞ்ஞானத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு செழிப்பான சூழ்நிலை உருவாகும்.

வியாபாரிகளுக்கு லாபம் கூடும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். எதிர்ப்புக்களை வெல்வீர்கள். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். தொழில் நுட்பத்திறமையால் சாதனைகள் செய்வீர். 7-ல் சனி, 8-ல் செவ்வாய் இருப்பதால் தீயவர்களுடன் தொடர்பு வேண்டாம். எதிலும் அவசரம் கூடாது. நிதானமாக செயல்படவும். கணவன்-மனைவி இடையே சிறுசிறு சலசலப்புக்கள் ஏற்பட்டு விலகும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: செப்டம்பர் 18, 24 (முற்பகல்).

திசைகள்: தென்கிழக்கு, கிழக்கு, வடக்கு, தென்மேற்கு.

நிறங்கள்: வெண்மை, பச்சை, இளநீலம், வெளிர்கறுப்பு, ஆரஞ்சு.

எண்கள்: 1, 4, 5, 6, 9.

பரிகாரம்: ஆஞ்சநேயர், சுப்பிரமணியரை வழிபடவும். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவவும்.

ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 6-ல் சனி, 11-ல் கேது உலவுவதால் குடும்பத்தில் குதூகலம் கூடும். விருந்து, உபசாரங்களிலும்; கேளிக்கை, உல்லாசங்களிலும் ஈடுபாடு உண்டாகும். மன உற்சாகம் பெருகும். நல்ல தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்களின் சேர்க்கை நிகழும். பொது நலப்பணிகளில் ஆர்வம் கூடும். தொழிலாளர்களது பிரச்சினைகள் குறையும்.

விவசாயிகள் ஏற்றம் காண்பார்கள். பழைய பொருட்கள் லாபம் தரும். உலோகங்கள், தாதுக்கள், விளைபொருட்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகளால் சற்று நலம் உண்டாகும். கணவன்-மனைவி இடையே சிறு சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டு விலகும். உடல்நலம் ஒருநாள் போல் மறுநாளிராது. வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். கவனம் தேவை.

அதிர்ஷ்டமான நாட்கள்: செப்டம்பர் 18, 24 (முற்பகல்).

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, மெரூன், வெண்மை, பச்சை, நீலம்.

எண்கள்: 1, 5, 6. 7, 8.

பரிகாரம்: துர்கையம்மனை வழிபடவும். குடும்ப பெரியவர்கள், வேத விற்பன்னர்களை வணங்கி, ஆசிப் பெறவும்.

மிதுன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சுக்கிரன், 4-ல் புதன், 6-ல் செவ்வாய், 10-ல் கேது உலவுவதால் செல்வாக்கும் மதிப்பும் உயரும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். பேச்சில் இனிமையும் திறமையும் வெளிப்படும். ஆன்மிக சொற்பொழிவாளர்கள், ஆசிரியர்கள், சட்ட வல்லுனர்களின் மதிப்பு உயரும். ஜலப்பொருட்கள் ஆதாயம் கொண்டுவரும்.

முக மலர்ச்சி ஏற்படும். மனம் தெளிவடையும். கணவன்-மனைவி உறவு நிலை திருப்தி தரும். செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காணலாம். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். அலைச்சல் வீண்போகாது. எதிரிகள் அடங்குவார்கள். வழக்கில் சாதகமான திருப்பமும் தீர்ப்பும் கிடைக்கும். கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். பிள்ளைகளால் நல்லதும் அல்லாததுமான பலன்கள் கலந்தவாறு ஏற்படும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேரும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: செப்டம்பர் 18, 24 (முற்பகல்).

திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு, வடக்கு.

நிறங்கள்: இளநீலம், வெண்மை, பச்சை, மெரூன், பொன் நிறம், மஞ்சள்.

எண்கள்: 3, 5, 6, 7, 9.

பரிகாரம்: துர்கை, ஆஞ்சநேய வழிபடவும்.

கடக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன், ராகு உலவுவது சிறப்பு. செவ்வாய் 5-ல் தன் சொந்த வீட்டில் குரு பார்வையுடன் இருப்பதால் நலம் புரிவார். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். மதிப்பும் அந்தஸ்தும் கூடும். முக்கியமான ஓரிரு எண்ணங்கள் நிறைவேறும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். முக்கியஸ்தர்களின் சந்திப்பால் நலம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

விருந்து, உபசாரங்களிலும்; கேளிக்கை, உல்லாசங்களிலும் ஈடுபாடு கூடும். பெண்களாலும், வாழ்க்கைத் துணையாலும் நலம் உண்டாகும். பயணத்தின் மூலம் அனுகூலம் ஏற்படும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்களால் ஆதாயம் பெறுவீர். புதிய சொத்துக்கள் சிலருக்கு சேரும். வியாபாரிகள் அகலக் கால் வைக்கலாகாது. தொழிலாளர்கள் அதிகம் பாடுபட வேண்டிவரும். கூட்டாளிகள் ஓரளவு உதவுவார்கள்.

அதிர்ஷ்டமான நாட்கள்: செப்டம்பர் 18, 24 (முற்பகல்).

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: வெண்மை, சாம்பல் நிறம், இளநீலம், ஆரஞ்சு.

எண்கள்: 1, 4, 6, 9.

பரிகாரம்: சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடவும். காக்கைக்கு அன்னமிடவும். ஏழை, எளியவர்களுக்கு உதவவும்.

சிம்ம ராசி வாசகர்களே

உங்கள் ராசியில் சுக்கிரனும் 2-ல் புதனும் 3-ல் சனியும் உலவுவது சிறப்பு. செவ்வாய் 4-ல் இருந்தாலும் சொந்த வீட்டில் குருபார்வையுடன் இருப்பதால் நலம் புரிவார். முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். சுபச் செலவுகள் சற்று கூடும். பிள்ளைகள் நல முன்னேற்றத்துக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். அந்தஸ்தும் மதிப்பும் உயரும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடி வரும். புதிய பொருட்சேர்க்கை நிகழும். பெண்கள் நலம் பெறுவார்கள். மாணவர்களுக்கு வெற்றிகள் குவியும். ஆராய்ச்சியாளர்கள் புகழ் பெறுவார்கள். பொது நலப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேரும். நண்பர்களும் உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். வாரப் பின்பகுதியில் பணவரவு சற்று கூடும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், தகவல் தொடர்புத்துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் எச்சரிக்கை தேவை.

அதிர்ஷ்டமான நாட்கள்: செப்டம்பர் 18, 24 (முற்பகல்).

திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, தெற்கு, மேற்கு.

நிறங்கள்: நீலம், பச்சை, சிவப்பு, வெண்மை.

எண்கள்: 5, 6, 8, 9.

பரிகாரம்: துர்கை, விநாயகருக்கு அர்ச்சனை, ஆராதனைகளைத் தொடர்ந்து செய்யவும். குரு ஸ்தானத்தில் உள்ளவர்களை வணங்கி, ஆசிகளைப் பெறவும்.

கன்னி ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 11-ல் குரு, 12-ல் சுக்கிரன் உலவுவது சிறப்பு. புதன் ஜன்ம ராசியில் பலம் பெற்று உலவுவதால் நலம் புரிவார். முக்கியமான காரியங்கள் நிறைவேறும். தொழிலில் அபிவிருத்தி காணலாம். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். பணவரவு திருப்தி தரும். புத்திசாலித்தனம் பளிச்சிடும். ஜலப்பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். கடல் வாணிபம் செய்பவர்களுக்கு லாபம் கூடும். நல்லவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள்.

நற்பணிகளில் ஈடுபாடு கூடும். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளச் செலவு செய்வீர்கள். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் போன்ற நவீன விஞ்ஞானத் துறைகள் லாபம் தரும். மருத்துவர்களுக்குப் பாராட்டுகள் குவியும். ஆராய்ச்சியாளர்கள் போற்றப்படுவார்கள். தெய்வப்பணிகளிலும் தர்மப்பணிகளிலும் ஈடுபாடு கூடும். இரக்க சுபாவம் வெளிப்படும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். இன்ஜினீயர்களது நிலை உயரும். நிலபுலங்கள் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைத்துவரும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: செப்டம்பர் 18, 24 (முற்பகல்).

திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, வடக்கு, தெற்கு.

நிறங்கள்: வெண்மை, இளநீலம், பச்சை, பொன் நிறம், சிவப்பு.

எண்கள்: 3, 5, 6, 9.

பரிகாரம்: ராகு, கேது, சனி ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்யவும். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவவும். ஸ்ரீரங்கநாதரை வழிபடவும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in