Published : 12 Apr 2019 09:57 AM
Last Updated : 12 Apr 2019 09:57 AM

கிருத்திகை நட்சத்திரம்: விகாரி வருட பலன்கள்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

காலம் தாழ்த்தாமல் எதையும் உடனுக்குடன் செய்து முடிக்க வேண்டும் என்ற வேகம் கொண்ட கிருத்திகை நட்சத்திர அன்பர்களே. நீங்கள் எடுக்கும் முடிவு மிகவும் ஆராய்ந்து எடுக்கப்பட்டதாக இருக்கும்.

இந்த வருடம் திடீர்திடீர் என கோபம் ஏற்படலாம். நெருக்கடி நிலை காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தள்ளிப் போடுவது நன்மை தரும். பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். ஆனாலும் பணப் புழக்கம் திருப்தியாக இருக்கும்.

தொழில் வியாபாரம் வழக்கம்போல் நடக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துப் பேசுவது நல்லது. லாபம் குறைவது போல் இருந்தாலும் பணவரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு வீணாகும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களிடம் கோபமாகப் பேசுவதைத் தவிர்த்து இதமாகப் பேசுவது நல்லது. கணவன் மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.  குழந்தைகளின் எதிர்கால நலன் பற்றி சிந்திப்பீர்கள். உங்களது உடைமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும்.

பெண்களுக்கு எந்தக் காரியத்திலும் நெருக்கடியான நிலை உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படும். பணவரவு திருப்தி தரும்.

அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். பண வரவு அமோகமாக இருக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள்.

மாணவர்களுக்கு பாடங்களை படிக்க வேண்டிய கட்டாயம் உண்டாகும். ஆசிரியர் மற்றும் சக மாணவர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.

பரிகாரம்: சிவாலயத்திற்குச் சென்று வழிபடுவது சிறந்தது.

மதிப்பெண்கள்: 80% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ வீடு மனை வாசல் அமையும்

- புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x