Published : 13 Apr 2019 11:23 AM
Last Updated : 13 Apr 2019 11:23 AM

உத்திராட நட்சத்திரம்: விகாரி வருட பலன்கள்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

எதிலும் நிதானமாக ஈடுபட்டு மற்றவர்களின் ஆலோசனையும் கேட்டு, காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிக்கும் உத்திராடம் நட்சத்திர அன்பர்களே.

இந்த வருடம் பணவரவு திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும்.  விருந்து கேளிக்கை  நிகழ்ச்சியில்  கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகையான யோகங்களும் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர்கள் உதவி கிடைக்கும்.

தொழில் வியாபாரம் நன்றாக  நடக்கும். எதிர்பார்த்த ஆர்டர்கள்  வந்து சேரும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதுர்யத்துடன் நடந்து கொண்டு நன்மை அடைவார்கள்.  எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கக்கூடும்.

குடும்பத்தில் இதமான  சூழ்நிலை காணப்படும். புதிய வீடு கட்டுவது, பழைய வீட்டை புதுப்பிப்பது முதலான பணிகளைத் தொடங்க முற்படுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை சேரும். அவர்களுக்குத் தேவையானவற்றை வாங்கி கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள்.

பெண்கள் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மிகப் பயணம் செல்வதில் விருப்பம் உண்டாகும்.

கலைத்துறையினருக்கு மிகவும் அனுகூலமான காலம் இது. வாய்ப்புகள் குவியும். புத்திசாதுர்யத்துடன் கையாள்வதால் லாபமான காலமாக அமையக்கூடிய வாய்ப்பு உண்டு.

அரசியல்வாதிகளுக்கு இனிமையான செய்திகள் தேடி வரும். நீண்ட நாளாக எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நண்பர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும் வாய்ப்புகள் இருப்பதால் கவனமுடன் இருப்பது நல்லது.

மாணவர்கள் புத்தி சாதுர்யத்துடன் நடந்து கொண்டு மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். கல்வியில் மேன்மை உண்டாகும்.

பரிகாரம்: சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து வணங்கிவந்தால், செல்வம் சேரும். செல்வாக்கு  உயரும்.  மன மகிழ்ச்சி உண்டாகும்.

மதிப்பெண்கள்: 54% நல்ல பலன்கள் கிடைக்கும்

+ குழப்பம் அகலும்

- எதிலும் நிதானமாக செயல்படவேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x