Last Updated : 24 Apr, 2019 03:44 PM

 

Published : 24 Apr 2019 03:44 PM
Last Updated : 24 Apr 2019 03:44 PM

பறவைகளுக்கு தண்ணீர், இனிப்பு... கடனெல்லாம் தீரும்!

’நோயற்ற வாழ்வுதான் குறைவில்லாத செல்வம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். இன்றக்கு நோயற்ற வாழ்வும் நிறைவான பணமும் என்று சொல்லும்படி ஆகிவிட்டது, பொருளாதாரத் தேவைகள்.

தீராத நோயும் தீரும்!

‘என்ன செய்தால், நோயிலிருந்து விடுபடலாம்’, எப்படி வழிபட்டால், கடன் பிரச்சினையெல்லாம் தீரும்’ என்பதே முக்கியப் பிரார்த்தனையாக, வழிபாடாக, வேண்டுதலாக இருக்கிறது.

வீட்டில் அடிக்கடி, யாருக்கேனும் ஏதேனும் உடல்நலக் கோளாறு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். ‘இந்த மருந்துமாத்திரைச் செலவே ஏகத்துக்கும் எகிறிக்கிட்டே இருக்கு. நிம்மதியே இல்லப்பா’ என்று புலம்பிக்கொண்டே இருப்பார்கள்.

கோயிலில், ஆன்மிக வழிபாட்டுத் தலங்களில், முழு மஞ்சள் நிற பரங்கிக்காய் தானம் தாருங்கள். மதிய வேளையில், பரங்கிக்காய் தானம் தந்தால், நோயில் இருந்தும் உடல்நலக் கோளாறிலிருந்தும் மொத்தக் குடும்பமும் நிவாரணம் கிடைத்து, நிம்மதியாக வாழ்வது உறுதி என்கிறார்கள்.

கடன்பட்டார் நெஞ்சம்போல்...

’வீட்ல ரெண்டுபேர் சம்பாதிக்கிறோம். ஆனாலும் கடன், கடன்னு போட்டு வாட்டி வதைக்குது. இதுலேருந்து மீளவே முடியலடா சாமீ’ என்று வருந்துபவர்கள் இருப்பார்கள். வீட்டில் ஒருவர் வேலைக்குப் போனாலென்ன... இரண்டுபேரும் வேலைக்குப் போனாலென்ன... கடன் கடன்தான். சுமைசுமைதான்!

உங்கள் வீட்டில், பறவைகள் வருவதற்கு சாத்தியம் இருக்கிறதா? அணில்கள் வருமா? வீட்டின் வாசற்பகுதியில், சிட் அவுட்டில், பால்கனியில்... மொட்டைமாடியில், பறவைகள் குடிப்பதற்கு தண்ணீர் வசதி செய்து தாருங்கள். அதேபோல், பறவைகளுக்கு இனிப்புகள், இனிப்புகள் கலந்த பிஸ்கட்டுகள் வழங்கி வாருங்கள். கடன் தொல்லையெல்லாம் சீக்கிரமே தீரும். வீண் விரயமெல்லாம் குறைந்துவிடும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

மனதிலே குழப்பமா?

‘பாழாப்போன இந்த மனசுல எப்பப் பாத்தாலும் ஒரு பயம், ஒரு குழப்பம், ஒரு கலவரம். ஏதோவொரு டென்ஷன், டிப்ரஷன். எதையும் சரியா யோசிக்கமுடியல. யோசிச்சதை தெளிவா செய்யமுடியல’ என்று அலுப்பும்சலிப்புமாக இருப்பவர்கள் நிறையபேர்.

மனதில் சோர்வு, குழப்பம், பயம் இருப்பவர்கள், படுக்கப் போகும்போது, உங்கள் தலைமாட்டில் ஒரு தம்ளர் தண்ணீரை மூடிவையுங்கள். இரவு நேரத்தில், அவசரத்துக்குக் குடிப்பதற்கான தண்ணீரை தனியே வைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தண்ணீரைக் குடிக்கவேண்டாம். தலைமாட்டில் தண்ணீர் தம்ளர் இருக்கட்டும்.

விடிந்ததும் அந்தத் தண்ணீரை மரத்தின் வேரிலோ, செடியிலோ, அல்லது எவர் காலும் மிதிபடாத வகையிலோ ஊற்றிவிடுங்கள்.

பிறகு, உங்களின் மனச்சோர்வு, மனக்குழப்பம், டென்ஷன், டிப்ரஷன் என எல்லாமே காணாமல் போயிருப்பதை உணருவீர்கள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x