

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை ரகசியமாகவே வைத்திருக்கும் பூரட்டாதி நட்சத்திர அன்பர்களே.
இந்த வருடம் எதிலும் நிதானமாக செயல்படுவது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடல்நலத்திற்கு செலவு செய்ய வேண்டி வரலாம்.
எதிர்பார்த்த பணவரவு தாமதமாக வந்து சேரும். எந்த வாக்குறுதியும் கொடுப்பதற்கு முன் யோசித்துச் செயல்படுவது நல்லது. மற்றவர்களின் செயல்கள் கோபத்தைத் தூண்டுவதாக இருக்கலாம்.
தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அவசரப்படாமல் நிதானமாக பணிகளைக் கவனிப்பது நல்லது.
குடும்பத்தில் சிறுசிறு மனவருத்தங்கள் ஏற்படும் வகையில் சூழ்நிலை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் முன்னேற்றத்தில் தடை தாமதம் ஏற்படலாம். கவனம் தேவை. பொருட்களை கவனமாகப் பாதுகாப்பது நல்லது.
பெண்களுக்கு எந்த வாக்குறுதியையும் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. கோபத்தைக் குறைப்பது நன்மை தரும்.
கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தைக் குறைத்து தன்மையாகப் பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும்.
அரசியல் துறையினருக்கு தேவையற்ற அலைச்சலைக் குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வீர்கள். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரலாம்.
மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கவனமுடன் படிப்பது நல்லது. எதிலும் நிதானம் தேவை.
பரிகாரம்: சரஸ்வதி கவசம் சொல்லி சரஸ்வதி தேவியை வணங்கி வர அனைத்து நலன்களும் வளங்களும் உண்டாகும்.
மதிப்பெண்கள்: 74% நல்ல பலன்கள் கிடைக்கும்
.+ பொருளாதார முன்னேற்றம் காணப்படும்
- உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.