சதயம் நட்சத்திரம்: விகாரி வருட பலன்கள்

சதயம் நட்சத்திரம்: விகாரி வருட பலன்கள்
Updated on
1 min read

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

எந்த நேரத்திலும் அனைவருக்கும் உதவும் இயல்பு உடைய சதயம் நட்சத்திர அன்பர்களே. நீங்கள் கற்பனை வளமும் கலையார்வமும் மிக்கவர்கள்.

இந்த வருடம் விருப்பங்கள் கைகூடும். பயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.  காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். பண வரவு குறையும். வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் நெருக்கடி ஏற்பட்டு நீங்கும். வழக்கம் போல் வியாபாரம் இருந்தாலும் திடீர் பணதேவை ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த வேலையை செய்யும் முன்பும் அதுபற்றி அதிகம் யோசிப்பார்கள். சிலருக்கு புதிய வேலையும் கிடைக்கலாம்.

குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் பணத்தேவை உண்டாகலாம்.

கலைத்துறையினருக்கு மகிழ்ச்சியான காலகட்டம். பணவரவு இருக்கும். வாய்ப்புகள் தேடிவரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வாய்ப்புகளும் சிலருக்கு கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு லாபமான காலமாக அமையும். பண வரவு திருப்தி தரும். எதிர்பார்த்த செய்தி உங்களுக்கு வந்து சேரும். சிலர் மேலிடத்தின் நேரடி அங்கீகாரத்தைப் பெறுவீர்கள்.

மாணவர்களுக்கு தொழிற்கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும். திட்டமிட்டு படிப்பது எதிர்காலத்திற்கு உதவும். திறமையுடன்  காரியங்களைச் செய்வீர்கள்.

பரிகாரம்: கருடாழ்வாரை வணங்கி வந்தால், மனக்கவலை நீங்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

மதிப்பெண்கள்: 74% நல்ல பலன்கள் கிடைக்கும்

+ உடல்நலத்தில் முன்னேற்றம்

- பண வரவு குறையும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in