Last Updated : 13 Apr, 2019 02:43 PM

 

Published : 13 Apr 2019 02:43 PM
Last Updated : 13 Apr 2019 02:43 PM

தமிழ் வருடப்பிறப்பில்... அம்பத்தூரில் நாளை 14ம் தேதி சுபிட்சம் தரும் ’ஏக தின லட்ச ஆவர்த்தி ஹோமம்’

சென்னை அம்பத்தூரில், விநாயகப் பெருமானுக்கு, ஏக தின லட்ச ஆவர்த்தி ஹோமம் நாளை தமிழ் வருடப் பிறப்பு நாளில் (14.4.19 ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் கலந்துகொண்டால், சகல செளபாக்கியங்களும் கிடைக்கப்பெறும் என்கிறார் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்.

சென்னை அம்பத்தூர் ராக்கி தியேட்டர் அருகில் உள்ள ஸ்ரீமஹா லட்சுமி திருமண மண்டபத்தில், விகாரி வருட சித்திரை தமிழ் வருடப் பிறப்பு நாளான நாளைய தினம் (14.4.19 ஞாயிற்றுக்கிழமை)  விநாயகப்பெருமானுக்கு ஏக தின லட்ச ஆவர்த்தி ஹோமம் நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த ஹோமம் நடைபெறுகிறது. இதனிடையே, காலை 10 முதல் மதியம் 1 மணி வரை, ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம் மற்றும் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் மற்றும் திருப்புகழ் பாராயணம் முதலானவையும் நடைபெறும்.

இந்த பிரமாண்டமான ஹோமத்தை பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் மற்றும் குழுவினர் நடத்துகின்றனர். மாலை 6 மணிக்கு விகாரி வருடத்தின் புத்தாண்டு ராசிபலன்கள் வழங்குகிறார்.

இந்த ஹோமத்தில் கலந்துகொண்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் விவரித்தார்.

‘’இந்த ஏக தின லட்ச ஆவர்த்தியில் கலந்துகொண்டால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும். குழந்தை இல்லையே என்று ஏங்கித்தவித்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெளிநாட்டில் கல்வி அல்லது உத்தியோக ஆசை உள்ளவர்களுக்கு அந்தத் தடைகள் யாவும் விலகிவிடும். வீடு மனை வாங்குவதற்கு இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் அகலும். குழந்தைகள் கல்வியில் சிறந்துவிளங்குவார்கள்.

எவ்வளவு சம்பாதித்தாலும் இந்தக் கடனிலிருந்து மீளமுடியவில்லையே எனும் சோகநிலை மாறும். கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். தீராத நோயெல்லாம் தீர்ந்துவிடும். முக்கியமாக, ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் அனைத்தும் அகலும்.

இந்த ஹோம பூஜைக்குத் தேவையான பொருட்கள், நெய், பழங்கள், பூக்கள் மற்றும் அன்னதானத்திற்குத் தேவையான பொருட்கள் ஆகியவற்றை வழங்குவதும் மிகுந்த பலனைத் தரும்.

இந்த பூஜையின் பிரசாதங்கள், காலை 8 மணியில் இருந்தே வழங்கப்படும். மேலும் கலந்துகொள்பவர்களுக்கு கட்டணத்தின் அடிப்படையில், பூஜிக்கப்பட்ட வெள்ளி டாலர் வழங்கப்படும்.

இவ்வாறு பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x