Published : 29 Mar 2019 08:35 AM
Last Updated : 29 Mar 2019 08:35 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். குடும்பத்தினருடன் கலந்துரையாடி முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். பண வரவு திருப்தி தரும்.

ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களைப் பற்றி வெளிநபர்களிடம் பேசவேண்டாம். பணப்பற்றாக்குறையால் கைமாற்றாக வாங்க வேண்டியது வரும். திடீர் பயணம் உண்டு.

மிதுனம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் கவுரவம் உயரும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

கடகம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டு. அரசு காரியங்கள் நிறைவேறும்.

சிம்மம்: பிள்ளைகளின் பொறுப்புணர்வைப் பாராட்டுவீர்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும்.

கன்னி: எதிர்பார்த்த வேலைகள் வெற்றிகரமாக முடியும். நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள்.

துலாம்: புது முயற்சிகளில் வெற்றி கிட்டும். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். தக்க சமயத்தில் நண்பர்கள் உதவுவார்கள்.

விருச்சிகம்: சொந்தபந்தங்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிட்டும். மனநிறைவுடன் சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

தனுசு: எடுத்த வேலையை முடிக்க முடியாமல் அவதிப்படுவீர்கள். நண்பர்கள், உறவினர்களை அநாவசியமாக பகைத்துக் கொள்ளாதீர்கள். புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும்.

மகரம்: வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள்.

கும்பம்: குடும்பத்தில் அமைதி நிலவும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் சந்திப்பு நிகழும். வாகனப் பழுது நீங்கும். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

மீனம்: விருந்தினர்கள் வருகையால் வீடு களைகட்டும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சுபச் செலவுகள் உண்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x