Last Updated : 20 Jan, 2019 10:58 AM

 

Published : 20 Jan 2019 10:58 AM
Last Updated : 20 Jan 2019 10:58 AM

எத்தனை எத்தனை முருகன்கள்!

* ஆண்டுக்கு மூன்று முறை-...  ஐப்பசி கந்த சஷ்டி விழாவின்போதும், தை மாதம் தெப்பத் திருவிழாவின்போதும், பங்குனி மாதத் திருவிழாவின்போதும் ஆக மூன்று சூரசம்ஹாரம் நடைபெறும் சிறப்பு கொண்டது திருப்பரங்குன்றம் திருத்தலம்.

* யோக நிலையில் அமர்ந்திருக்கும் முருகப் பெருமானின் விக்கிரகத் திருமேனியை சென்னை திண்டிவனம் சாலையில், மதுராந்தகம் அருகில் உள்ள குமாரவாடி, ஸ்ரீஅழகேஸ்வரப் பெருமாள் கோயிலில் காணலாம்.

 

* நாமக்கல் அருகில் உள்ள கொல்லிமலையில் உள்ள ஸ்ரீபழநியப்பர் கோயிலில் உள்ள முருகன் விக்கிரகத்தில்,  மகுடத்துக்குப் பதிலாக கொண்டை போன்ற அமைப்பு உள்ளது. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம் இது!

 

* கொடைக்கானலில் குறிஞ்சி ஆண்டவர் கோயில் போல வேலூர் அருகில் உள்ள ஏலகிரியில் வேலவன் கோயில் அமைந்துள்ளது. பக்திக்கும் பரவசத்துக்கும் உரிய இடமாக திகழ்கிறது ஆலயம். ஏலகிரி மலையின் உச்சியில் இது அமைந்துள்ளதால் பச்சைப்பசேல் மலையின் எழில் தோற்றத்தையும் ரசிக்கலாம். ஆடி மாதத்தில் இக்கோயிலில் நடைபெறும் விழா சிறப்பானது. கோயிலின் முன்னே கடோத்கஜனின் பிரமாண்டமான சுதைச் சிற்பமும் உள்ளது.

 

* முருகக் கடவுளின் திருக்கரத்தில் சேவல்கொடி இருப்பது வழக்கமான ஒன்று. ஆனால், சேவலையே கையில் தாங்கி நிற்கும் வித்தியாசமான முருகனின் திருக்கோலத்தைக் காண்பது அரிது. பல்லடம் அருகில் இருக்கும் தென்சேரி மலைப்பாளையத்தில் உள்ள மந்திரகிரி ஸ்ரீவேலாயுதசுவாமி கோயிலில், கையில் சேவலோடு காட்சி தரும் முருகப்பெருமானைத் தரிசிக்கலாம்.

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x