Published : 14 Feb 2019 10:13 am

Updated : 14 Feb 2019 10:13 am

 

Published : 14 Feb 2019 10:13 AM
Last Updated : 14 Feb 2019 10:13 AM

வார ராசிபலன் பிப்ரவரி 14 முதல் பிப்ரவரி 20 வரை (துலாம் முதல் மீனம் வரை)

14-20

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் எடுத்த காரியம் கைகூடும். விரோதிகளும் நண்பராவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பணவரவு திருப்தி தரும். கடன் விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. தொழில், வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் மேலதிகாரிகளால் கிடைக்கும். பொறுப்புகள் கூடும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும் கிடைக்கக்கூடும். குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் தலைதூக்கும்.


அவற்றை லாகவமாகக் கையாண்டு சமாளிப்பீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும் பெண்களுக்கு பணவரத்து திருப்திகரமாக இருக்கும் அரசியல்வாதிகளுக்கு நண்பர்களால் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத்தரம் உயரும். கலைத் துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாணவர்களுக்கு, தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் கைகூடும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை

எண்கள்: 2, 5, 6

பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்தில் தீபம் ஏற்றி வழிபட இழுபறியான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

 

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் வீண்கவலை ஏற்பட்டு நீங்கும். நினைத்த காரியத்தைச் செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அதே நேரத்தில் எதிர்பாராத செலவும் ஏற்படும். உடைமைகளைக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும். தொழில், வியாபாரத்தில் பணத்தேவையைச் சரிகட்ட நண்பர்களின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்ல வேண்டும். சக ஊழியர்களிடம் அலுவலக ரகசியங்களைக் கூறுவதைத் தவிர்க்க வேண்டும். வாழ்க்கைத் துணையால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள்.

உறவினர்கள், நண்பர்களால் தக்க தருணத்தில் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் விலகும். எதிரிகளும் நண்பராவார்கள். அரசியல்வாதிகளுக்கு போராட்டங்கள் இருந்தாலும் முடிவுகள் சாதகமாக இருக்கும். கலைத் துறையினருக்கு வேலைகள் சீரான நிலையில் இருக்கும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு, எதிலும் எச்சரிக்கை தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், செவ்வாய்

திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: சிவப்பு, அடர் நீலம்

எண்கள்: 2, 9

பரிகாரம்: கந்த சஷ்டி கவசம் படித்து முருகனை வணங்க அருள் கிடைக்கும்.

 

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் பணவரவு அதிகமாகும். எதிர்ப்புகள் நீங்கி எதிலும் உற்சாகம் உண்டாகும். மனமகிழ்ச்சிக்காகப் பணம் செலவு செய்ய தயங்க மாட்டீர்கள். நண்பர்கள் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும். தொழில் விரிவாக்கம் தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுவீர்கள். பயணங்களால் லாபம் கிடைக்கப் பெறலாம். உத்தியோகத்தில் கோபப்படாமல் மேலதிகாரிகள் சொன்ன வேலையைச் செய்து முடிப்பது நல்லது. குடும்பத்தில் சுப காரியம் நடக்கலாம்.

குழந்தை பாக்கியம் ஏற்படும். கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளால் நன்மை ஏற்படும். அவர்களது திறமைகண்டு மன மகிழ்ச்சி கொள்வீர்கள். பெண்களுக்கு வீண் அலைச்சலும், செலவும் ஏற்பட்டும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது. வீண் அலைச்சலும், வேலைப் பளுவும் ஏற்படலாம். கலைத்துறையினருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். மாணவர்களுக்கு மனத்தில் தன்னம்பிக்கை உண்டாகும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

எண்கள்: 1, 3, 6

பரிகாரம்: சனீஸ்வர ஸ்தோத்திரங்களை சொல்லி நல்லெண்ணைய் தீபம் ஏற்றி சனி பகவானை வழிபடுவதால் துன்பங்கள் நீங்கும்.

 

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் வீண் அலைச்சல் உண்டாகும். ஆனாலும் சுபமாக எதுவும் நடந்து முடியும். மன அமைதி பாதிக்கும்படியான சூழ்நிலை ஏற்பட்டு நீங்கும். நண்பர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. தொழிலில் மன நிம்மதி உண்டாகும். மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் வேலைச் சுமை இருக்கும். இல்லத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தெய்வ நம்பிக்கை கூடும்.

உறவினர்கள், நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு திறமையாக சமாளித்து எந்தப் பிரச்சினையிலும் சாதகமான முடிவைப் பெறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு தேவையான பண உதவி கிடைக்கும். கடன் தொல்லை குறையும். கலைத் துறையினருக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். விருதுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு தேர்வுகள் பற்றிய பயம் நீங்கும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெளிர் நீலம், பச்சை

எண்கள்: 2, 5, 6

பரிகாரம்: சிவன் கோயிலுக்குப் போய் தீபம் ஏற்றி வழிபட எல்லா பிரச்சினைகளும் நீங்கும்.

 

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் உங்களின் திறமை அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். விருப்பமானவர்களைச் சந்தித்து உரையாடி மகிழ்ச்சியடைவீர்கள். மனத்துணிவு உண்டாகும். எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து நன்மை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் அனுகூலம் ஏற்பட்டாலும்,சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகவேண்டும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கலாம். உறவினர்களிடம் நிதானமாகப் பேச வேண்டும்.

இடைவெளி குறையும். பெரியோர் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளிடம் இனிமையாகப் பேசுவது நல்லது. பெண்களுக்கு, கோபத்தைக் குறைத்து நிதானமாகப் பேசுவதன் மூலம் நன்மை ஏற்படும். அரசியல்வாதிகள் எந்த ஒரு வேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. கலைத் துறையினருக்கு எதிர்பாலினத்தவரிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம். கடன் கொடுப்பது, நிதியுதவி போன்றவற்றில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு சக மாணவர்களிடம் சகஜமாக பேசி பழகுவது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு, வடகிழக்கு

நிறங்கள்: நீலம், பச்சை

எண்கள்: 2, 3, 6

பரிகாரம்: விநாயகரை சனிக்கிழமை வணங்கி வருவது மன அமைதியை தரும். கடன் தொல்லை குறையும்.

 

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் வரவைப் போல செலவு இருக்கும். வெளியூர்ப் பயணங்களால் அலைச்சலும், எதிர்பாராத பொருள் இழப்பும் இருக்கும். எதிர்ப்புகளைச் சமாளிக்கும் போது கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் கூடுதல் அலைச்சல் இருந்தாலும் முடிவில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திருப்தியாக உணர்வார்கள். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த மனத்தாங்கல் நீங்கி மகிழ்ச்சியும், சகஜ நிலையும் காணப்படும். உறவினர்கள், நண்பர்களிடம் பேசும்போது நிதானமாகப் பேச வேண்டும்.

பெண்களுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு நற்பலன்கள் ஏற்படும். கலைத் துறையினருக்கு மகிழ்ச்சியான காலகட்டமாக இருக்கும். பணவரவு இருக்கும். வாய்ப்புகள் தேடிவரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வாய்ப்புகளும் சிலருக்குக் கிடைக்கும். மாணவர்களுக்கு தொழிற்கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும். திட்டமிட்டுப் படிப்பது எதிர்காலத்துக்கு உதவும். திறமையுடன் காரியங்களைச் செய்வீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

எண்கள்: 1, 3, 6

பரிகாரம்: வியாழக்கிழமை குலதெய்வத்தை வழிபட்டால் எதிர்ப்புகள் அகலும், மனதைரியம் உண்டாகும்.

தவறவிடாதீர்!


  ராசிபலன்இந்து ராசிபலன்வார ராசிபலன்ராசி பலன்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்ஜோதிடம்Weekly horoscopeTamil horoscopeHindu horoscopeHindu tamil horoscopeTamil rasipalan

  Sign up to receive our newsletter in your inbox every day!

  You May Like

  More From This Category

  More From this Author

  x