Published : 28 Feb 2019 10:04 AM
Last Updated : 28 Feb 2019 10:04 AM

கங்காளமூர்த்தி

கங்காளமூர்த்தி

சிவனின் ஓர் உக்கிர வடிவம். இதன் உருவங்கள் பெரும்பாலும் தென்னிந்தியாவில் இருக்கின்றன. விஷ்ணுவின் வாயிற்காவலனான விஸ்வக்சேனன் சிவனை விஷ்ணுவின் இருப்பிடத்தில் அனுமதிக்கவில்லை. அதனால் சிவன் அவனைக் கொன்றுவிட்டான். எனவேதான் அவன் எப்போதுமே விஸ்வக்சேனனின் பிணத்தோடும் தனது திரிசூலத்தோடும் சித்தரிக்கப்படுகிறான்.

 

தபியீன்கள்

நபிகள் நாயகத்தின் வாழ்நாளில் அவரோடு இருந்தவர்களைப் பின்பற்றியவர்கள் தபியீன்கள் என்றழைக்கப்படுகிறார்கள். இஸ்லாமிய மார்க்க அறிவின் வெவ்வேறு மரபுகளைத் தொகுத்தவர்கள் இவர்கள்.

 

வீண் கவலைகள் எதற்கு

வசந்த காலத்துக்கென்று நூறு மலர்கள்இலையுதிர் காலத்துக்கோ நிலவு உள்ளது

கோடைக் காலத்தில் தென்றல்கள்

கூதிர்காலத்துக்குப் பனி.

வீண் கவலைகள்

உனது இதயத்தைக் கனக்க விடாதிருந்தால்

உனது மொத்த வாழ்வும்

தீராத நற்பருவமாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x