Published : 27 Sep 2014 10:42 am

Updated : 27 Sep 2014 10:42 am

 

Published : 27 Sep 2014 10:42 AM
Last Updated : 27 Sep 2014 10:42 AM

சாம்பியன்ஸ் லீக் சூப்பர் ஓவரில் வென்றது கோப்ராஸ்

சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் சூப்பர் ஓவர் முறையில் பர்படாஸ் டிரைடென்ட்ஸை தோற்கடித்தது கேப் கோப்ராஸ்.

மொஹாலியில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பர்படாஸ் அணியில் ஜொனாதன் கார்ட்டர் 68 பந்துகளில் 5 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 111 ரன்கள் குவிக்க, அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் குவித்தது. கார்ட்டருக்கு அடுத்தபடியாக முனவீரா 21 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்தார்.

பின்னர் பேட் செய்த கேப் கோப்ராஸ் அணியில் ஆம்லா 59, ரிச்சர்ட் லெவி 39 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். பின்வரிசையில் இங்கெல்பிரெக்ட், கெம்ப் ஆகியோர் ஆட்டமிழக்காமல் முறையே 19 மற்றும் 12 ரன்கள் சேர்க்க, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் குவிக்க, ஆட்டம் டையானது.

இதையடுத்து வெற்றியைத் தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதில் முதலில் பேட் செய்த கேப் கோப்ராஸ் அணி 11 ரன்கள் எடுத்தது. ஆனால் பின்னர் பேட் செய்த டிரைடென்ட்ஸ் அணியால் 10 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் ஒரு ரன்னில் த்ரில் வெற்றி கண்ட கோப்ராஸ், அரையிறுதி வாய்ப்பையும் தக்கவைத்துக் கொண்டது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

சாம்பியன்ஸ் லீக்டி20 கிரிக்கெட்சூப்பர் ஓவர்பர்படாஸ் டிரைடென்ட்ஸ்கேப் கோப்ராஸ்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author