காஞ்சிப் பெரியவருக்கு அரிய மலர்

காஞ்சிப் பெரியவருக்கு அரிய மலர்

Published on

‘எ சர்ச் இன் சீக்ரெட் இந்தியா’ நூலாசிரியர் பால் ப்ரண்டன், காஞ்சிப் பெரியவருடன் நடத்திய சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஆன்மத் தேடலுடன் இந்தியா வந்த பால் ப்ரண்டனை, ரமண மகரிஷியை நோக்கி காஞ்சிப் பெரியவர் ஆற்றுப்படுத்தினார். அந்த உரையாடல் இங்கே தரப்பட்டுள்ளது…

பால் ப்ரண்டன்: யோகாப்பியாசத்தில் சித்தி பெற்ற ஒரு நபரை நான் சந்திக்க விரும்புகிறேன். அவர் என்னிடம் பேசக்கூட வேண்டியதில்லை. என்னை வழிநடத்த முடியுமா?

மகாபெரியவர்: உங்களது லட்சியத்தில் எந்தக் குற்றமும் இல்லை. அதற்கு அர்ப்பணிப்புடன் மகாபலம் பொருந்திய விருப்பமும் அவசியம். இரண்டும் உங்களிடம் இருப்பதாக நான் நினைக்கிறேன். உங்களிடத்தில் உள்ளொளியின் அறிகுறிகள் தெரிகின்றன. அந்த ஒளி உங்கள் இலக்கை எட்டுவதற்கு உதவும்.

ப்ரண்டன்: என்னுடைய முயற்சிகளில் நான் தோல்வியடைந்து விட்டால் உங்கள் உதவியை நான் நாடலாமா?

மகாபெரியவர்: நான் ஒரு நிறுவனத்தின் தலைவர். அதன் விவகாரங்களை நான் கவனிக்க வேண்டிய பொறுப்பில் இருக்கிறேன். தனிமைவாசத்தில் இருக்க அவகாசம் இருக்கும் ஒருவரைத் தான் நீங்கள் அணுக வேண்டும்.

ப்ரண்டன்: உத்தமமான ஆச்சாரியார் களைக் கண்டறிவதும் அவர்களை ஒரு ஐரோப்பியர் பார்ப்பதும் சாத்தியமில்லாதது என்கிறார்களே?

மகாபெரியவர்: நேர்மையான துறவிகள் இருக்கிறார்கள். அவர்களை நீங்கள் சந்திக்கவும் முடியும்.

ப்ரண்டன்: அவர்களில் யாரையாவது நான் பார்க்க முடியுமா?

மகாபெரியவர்: எனக்கு இரண்டுபேரைச் சொல்ல முடியும். ஒருவரோ தெற்கே மௌனத்தை அனுஷ்டித்தபடி அடர்ந்த காட்டுக்குள் வசிப்பவர். அவர் ஐரோப்பியர் ஒருவரைக் காண மறுக்கவும் கூடும். இன்னொருவர் நகரத்திலேயே வசிக்கிறார். உத்தம ஞானியும்கூட. அங்கே போகலாம். அவர் திருவண்ணாமலையில் இருக்கிறார். அவரை மகரிஷி என்றும் சொல்வார்கள்.

km-eotjpg

காஞ்சி மகாபெரியவாள் என்று அன்புடன் அழைக்கப்படும் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி குறித்து ‘தி இந்து’ குழுமம் சார்பில் வெளியாகியுள்ள ‘எம்பாடிமெண்ட் ஆப் ட்ரூத்’ என்ற சிறப்பு மலரின் முதல் தொகுதி இது. காஞ்சிப் பெரியவரின் நோக்கங்கள், செயல்பாடுகள் இந்த மலரில் நேர்த்தியாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அரிதான புகைப்படங்கள், காந்தி, பால் ப்ரண்டன் ஆகிய அரிய ஆளுமைகளுடனான சந்திப்புகள், சிறந்த கட்டுரைகளுடன் 192 பக்கங்களில் வெளியாகியுள்ள மலர் இது.

EMBODIMENT OF TRUTH - KANCHI MAHASWAMI HIS VISION AND MISSION (VOLUME I)

தி இந்து குரூப் பப்ளிகேஷன்ஸ், 850-860, அண்ணா சாலை, சென்னை– 02. 

தபால் வழியாக காசோலை அனுப்பிப் பெறலாம். THG Publishing Private Limited என்ற பெயரில் ரூ. 459/-க்கு காசோலை அனுப்பிப் பெறலாம். தபால் செலவு ரூ. 60/-

இணையவழியில் வாங்க: www.thehindu.com/publications

மொத்தமாகப் பிரதிகள் வாங்க tobookstore@thehindu.co.in-க்கு மின்னஞ்சல் செய்யவும். மேலும் விவரங்களுக்கு 1800 3000 1878

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in